எங்களை ஆசீர்வதித்துப் பிரகாசியும்
இராகத் தலைவனுக்கு; நரம்பு வாத்தியங்களுடன்; ஒரு சங்கீதம்; ஒரு பாடல்.
67 1 எங்கள் பிதா எங்களுக்கு இரங்கி, எங்களை ஆசீர்வதிப்பாராக, தம்முடைய முகத்தை எங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணுவாராக. சேலா a a v1 சேலா: இசை அல்லது ஆராதனை சம்பந்தமான இடைநிறுத்தக் குறிப்பு; அதன் சரியான பொருள் நிச்சயமற்றது. 2 உம்முடைய வழி பூமியில் அறியப்படும்படிக்கும், உம்முடைய இரட்சிப்பு எல்லா ஜாதிகளுக்குள்ளும் அறியப்படும்படிக்கும். 3 எங்கள் பிதாவே, ஜனங்கள் உம்மைத் துதிப்பார்களாக; சகல ஜனங்களும் உம்மைத் துதிப்பார்களாக. 4 ஜாதிகள் மகிழ்ந்து கெம்பீரமாய்ப் பாடுவார்களாக; ஏனெனில் நீர் ஜனங்களை நீதியாய் நியாயந்தீர்த்து, பூமியிலுள்ள ஜாதிகளை வழிநடத்துகிறீர். சேலா
5 எங்கள் பிதாவே, ஜனங்கள் உம்மைத் துதிப்பார்களாக; சகல ஜனங்களும் உம்மைத் துதிப்பார்களாக. 6 பூமி தன் பலனைத் தந்தது; எங்கள் பிதா, எங்கள் சொந்தப் பிதா எங்களை ஆசீர்வதிக்கிறார். 7 எங்கள் பிதா எங்களை ஆசீர்வதிப்பாராக; பூமியின் எல்லா எல்லைகளும் அவருக்குப் பயந்திருப்பார்களாக.