என்னை நியாயந்தீரும், என் பிதாவே
43 1 என்னை நியாயந்தீரும், என் பிதாவே, உண்மையற்ற ஜாதிக்கு விரோதமாய் என் வழக்கை வழக்காடும்; வஞ்சகமும் அநீதியுமுள்ள மனிதனிடமிருந்து என்னை விடுவியும். 2 நீரே என் பிதா, என் அரணானவர். ஏன் நீர் என்னைத் தள்ளிவிட்டீர்? சத்துருவினால் ஒடுக்கப்பட்டு, நான் ஏன் துக்கத்தோடே திரியவேண்டும்? 3 உம்முடைய ஒளியையும் உம்முடைய சத்தியத்தையும் அனுப்பும்; அவைகள் என்னை வழிநடத்தட்டும்; அவைகள் என்னை உம்முடைய பரிசுத்த பர்வதத்திற்கும், நீர் வாசம்பண்ணும் இடத்திற்கும் கொண்டுவரட்டும். 4 அப்பொழுது நான் எங்கள் பிதாவின் பலிபீடத்திற்கு, என் மகா ஆனந்தமாகிய அவரிடத்திற்குப் போவேன்; சுரமண்டலத்தால் என் பிதாவைத் துதிப்பேன். 5 என் ஆத்துமாவே, நீ ஏன் தளர்ந்திருக்கிறாய்? ஏன் எனக்குள் கலங்குகிறாய்? எங்கள் பிதாவை நம்பியிரு; நான் இன்னும் துதிப்பேன் என் இரட்சிப்பும் என் பிதாவுமாகிய அவரை.