பூமியின் கடையாந்தரங்களிலிருந்து ஒரு கூப்பிடுதல்
சங்கீதக்காரர் தலைவனுக்கு; நரம்பு வாத்தியங்களோடு. தாவீதின் பாடல்.
61 1 என் கூப்பிடுதலைக் கேளும், என் பிதாவே; என் ஜெபத்தைக் கவனியும். 2 என் இருதயம் தளர்ந்துபோகையில், பூமியின் கடையாந்தரங்களிலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; கன்மலைக்கு என்னை நடத்திச் செல்லும், அது என்னிலும் உயர்ந்தது. 3 ஏனெனில் நீர் எனக்கு அடைக்கலமாயிருந்தீர், சத்துருவுக்கு எதிரான பலமான கோபுரமாயிருந்தீர்.
4 உம்முடைய கூடாரத்தில் என்றென்றைக்கும் தங்கியிருக்க வாஞ்சிக்கிறேன் உம்முடைய செட்டைகளின் மறைவிலே அடைக்கலம் புகுவேன். சேலா 5 என் பிதாவே, நீர் என் பொருத்தனைகளைக் கேட்டீர்; உம்முடைய நாமத்திற்குப் பயந்து நடக்கிறவர்களின் சுதந்தரத்தை எனக்குத் தந்தீர். 6 ராஜாவின் ஆயுளுக்கு நாட்களைக் கூட்டும்; அவருடைய வருடங்கள் தலைமுறை தலைமுறையாய் நீடிக்கட்டும். 7 அவர் எங்கள் பிதாவுக்கு முன்பாக என்றென்றைக்கும் சிங்காசனத்தில் வீற்றிருப்பாராக; உம்முடைய உடன்படிக்கை அன்பையும் உண்மையையும் அவரைக் காக்கும்படி நியமியும். 8 அப்பொழுது நான் உம்முடைய நாமத்தை என்றென்றும் கீர்த்தனம் பண்ணுவேன் என் பொருத்தனைகளை நாளுக்குநாள் செலுத்துவேன்.