என் துணை எங்கிருந்து வரும்?
ஆரோகண பாட்டு.
121 1 நான் என் கண்களை மலைகளுக்கு நேராக ஏறெடுக்கிறேன்—என் துணை எங்கிருந்து வரும்?
2 என் துணை வானத்தையும் பூமியையும் உண்டாக்கின என் பிதாவினிடத்திலிருந்து வரும்.
3 அவர் உன் காலைத் தள்ளாடவிடார்; உன்னைக் காக்கிறவர் உறங்கார். 4 இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குகிறதுமில்லை, தூங்குகிறதுமில்லை.
5 உன் பிதா உன்னைக் காக்கிறார்; உன் பிதா உன் வலதுபுறத்தில் உனக்கு நிழலாயிருக்கிறார். 6 பகலில் சூரியன் உன்னைச் சேதப்படுத்துவதில்லை, இரவில் சந்திரனும் சேதப்படுத்துவதில்லை.
7 உன் பிதா எல்லாத் தீங்குக்கும் உன்னைக் காப்பார்; அவர் உன் ஜீவனைக் காப்பார். 8 உன் பிதா உன் போக்கையும் வரவையும் காப்பார், இதுமுதல் என்றென்றைக்கும்.