Read. Receive. Recommend.

♥ Reviews

சங்கீதம் 12

Book

பிரதான கீதவாத்தியக்காரனுக்கு; சேமினீத் ஸ்வரத்தில் வாசிக்க; தாவீதின் சங்கீதம்.

Chapter 12.

எங்கள் பிதாவே, உதவிசெய்யும்; ஏனெனில் உண்மையுள்ளவர்கள் ஒழிந்துபோனார்கள்; உண்மையானவர்கள் மனுபுத்திரரிடத்திலிருந்து மறைந்துபோனார்கள். ஒவ்வொருவனும் தன் அயலானிடத்தில் பொய் பேசுகிறான்; இச்சகமான உதடுகளாலும் இருமனதோடும் அவர்கள் பேசுகிறார்கள். எங்கள் பிதா இச்சகமான உதடுகள் யாவையும், பெருமையான காரியங்களைப் பேசுகிற எல்லா நாவையும் அறுத்துப்போடுவாராக; “நம்முடைய நாவினால் நாம் மேற்கொள்ளுவோம்; நம்முடைய உதடுகள் நம்முடையவைகளே — நமக்கு ஆண்டவன் யார்?” என்று சொல்லுகிறவர்களையே.

“சிறுமையானவர்கள் பாழாக்கப்படுகிறதினாலும், எளியவர்கள் தவிக்கிறதினாலும், நான் இப்பொழுது எழுந்திருப்பேன்” என்று எங்கள் பிதா சொல்லுகிறார். “ஏங்குகிறவனை நான் பாதுகாப்பான இடத்தில் வைப்பேன்.”

எங்கள் பிதாவின் வார்த்தைகள் சுத்தமான வார்த்தைகள்; உலையில் புடமிடப்பட்ட வெள்ளியைப்போன்றவை, மண்ணென்னும் உலையில் ஏழுதரம் சுத்திகரிக்கப்பட்டவை. எங்கள் பிதாவே, நீரே எளியவர்களைப் பாதுகாப்பீர்; இந்தச் சந்ததியினின்று என்றென்றைக்கும் எங்களைக் காத்துக்கொள்வீர். மனுபுத்திரரிடத்தில் இழிவானது உயர்த்தப்படும்போது, துன்மார்க்கர் எப்பக்கத்திலும் சுற்றித்திரிகிறார்கள்.

A young man reading the Father's Heart Bible print edition in a coffee shop Now in Print

Comments

Thoughts, questions, or a word this chapter stirred in you — share it here. Every comment puts your name on the Wall of Contributors.

Reading, listening, copying and sharing are open to everyone — no account needed. Commenting, highlighting, and bookmarking your place come with a free account, and every comment puts your name on the Wall of Contributors.

Join the Family — it's free →
  • No comments yet. Be the first to add your voice.