அளவுநூல் பிடித்த ஒரு மனிதன்
2 1பின்பு நான் என் கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது, தமது கையில் அளவுநூலைப் பிடித்திருந்த ஒரு மனிதனைக் கண்டேன். 2நான், “நீர் எங்கே போகிறீர்?” என்று கேட்டேன். அதற்கு அவர், “எருசலேமை அளந்து, அதின் அகலம் எவ்வளவு, நீளம் எவ்வளவு என்று பார்க்கப் போகிறேன்” என்று என்னிடம் சொன்னார்.
3என்னோடே பேசின தூதன் புறப்பட்டுப்போனான்; அப்பொழுது வேறொரு தூதன் அவனைச் சந்திக்கும்படி வெளியே வந்து, 4அவனை நோக்கி, “நீ ஓடி, இந்த வாலிபனிடம் சொல்லவேண்டியது: ‘எருசலேம் தன்னில் இருக்கும் திரளான ஜனங்களினாலும் மிருகஜீவன்களினாலும், மதிலில்லாத வெளிநிலம்போல் குடியேறியிருக்கும்.’
5நான்தானே அதைச் சுற்றிலும் அக்கினி மதிலாய் இருப்பேன் என்றும், அதின் நடுவில் மகிமையாய் இருப்பேன் என்றும் எங்கள் பிதா சொல்லுகிறார்.’”
6“ஓய், ஓய், வடதேசத்தைவிட்டு ஓடிவாருங்கள் என்று எங்கள் பிதா சொல்லுகிறார்; ஏனெனில் நான் உங்களை வானத்தின் நான்கு திசைகளின் காற்றுகளைப்போல் சிதறடித்தேன் என்று எங்கள் பிதா சொல்லுகிறார். 7சீயோனே, வா! பாபிலோன் குமாரத்தியோடே வாசம்பண்ணுகிறவளே, தப்பித்துக்கொள்.
8உங்களைச் சூறையாடின ஜாதிகளுக்கு விரோதமாய் அவருடைய மகிமை என்னை அனுப்பினபின்பு, சேனைகளின் பிதா சொல்லுகிறது என்னவெனில்: உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்:
9இதோ, நான் என் கையை அவர்கள்மேல் அசைப்பேன்; அப்பொழுது அவர்கள் தங்களுக்கு ஊழியம் செய்தவர்களுக்குச் சூறையாகுவார்கள்; அப்பொழுது சேனைகளின் பிதா என்னை அனுப்பினார் என்று அறிந்துகொள்வீர்கள்.
10சீயோன் குமாரத்தியே, பாடி மகிழ்ந்திரு; ஏனெனில் இதோ, நான் வந்து உன் நடுவில் வாசம்பண்ணுவேன் என்று எங்கள் பிதா சொல்லுகிறார்.
11“அந்நாளிலே அநேக ஜாதிகள் எங்கள் பிதாவைச் சேர்ந்துகொண்டு, என் பிள்ளைகளாவார்கள்; நான் உன் நடுவில் வாசம்பண்ணுவேன்; அப்பொழுது சேனைகளின் பிதா என்னை உன்னிடத்திற்கு அனுப்பினார் என்று அறிந்துகொள்வாய். 12எங்கள் பிதா பரிசுத்த தேசத்திலே யூதாவைத் தமது பங்காக உரிமைகொண்டு, மறுபடியும் எருசலேமைத் தெரிந்துகொள்வார்.
13மாம்சமான யாவரும் எங்கள் பிதாவுக்கு முன்பாக மௌனமாயிருங்கள்; ஏனெனில் அவர் தமது பரிசுத்த வாசஸ்தலத்திலிருந்து எழுந்தருளுகிறார்.”