உன்னில் ஒரு குற்றமும் இல்லை
4 1நீ எவ்வளவு அழகாயிருக்கிறாய், என் பிரியமே, நீ எவ்வளவு அழகாயிருக்கிறாய்! உன் கண்கள் புறாக்கள், உன் முக்காட்டுக்குப் பின்னாலிருக்கிறது. உன் தலைமயிர் வெள்ளாட்டு மந்தையைப் போலிருக்கிறது, கீலேயாத் மலைச்சரிவுகளில் இறங்கிவருகிறது. 2உன் பற்கள் அப்பொழுதுதான் மயிர் கத்தரிக்கப்பட்டு, குளிப்பாட்டப்பட்டு ஏறிவரும் ஆட்டு மந்தையைப் போலிருக்கிறது; அவை ஒவ்வொன்றும் இரட்டைக் குட்டிகளைப் பெறுகிறது, அவற்றில் ஒன்றும் தன் குட்டியை இழந்துபோகவில்லை. 3உன் உதடுகள் சிவப்பு நூலைப் போலிருக்கிறது, உன் வாய் இனிமையானது. உன் முக்காட்டுக்குப் பின்னாலிருக்கிற உன் கன்னங்கள் மாதுளம்பழத்தின் பாதிகளைப் போலிருக்கிறது. 4உன் கழுத்து தாவீதின் கோபுரத்தைப் போலிருக்கிறது, அது வரிசை வரிசையான கற்களால் கட்டப்பட்டது; அதில் 1,000 கேடகங்கள் தொங்குகிறது, ஒவ்வொன்றும் வீரனுடைய கேடகம். 5உன் இரண்டு ஸ்தனங்களும் இரண்டு மறியைப் போலிருக்கிறது, வெளிமானின் இரட்டைக் குட்டிகள், அவை லீலிமலர்களுக்குள்ளே மேய்கிறது. 6பொழுதுவிடிந்து நிழல்கள் ஓடிப்போகும்வரைக்கும், நான் வெள்ளைப்போளமலைக்குப் போவேன் சாம்பிராணிக் குன்றுக்கும் போவேன். 7என் பிரியமே, நீ முழுவதும் அழகாயிருக்கிறாய்; உன்னில் ஒரு குற்றமும் இல்லை.
8என் மணவாளியே, லீபனோனிலிருந்து என்னோடேகூட வா; லீபனோனிலிருந்து என்னோடேகூட வா. ஆமானாவின் சிகரத்திலிருந்து கீழே பார், சேனீர் எர்மோனின் சிகரத்திலிருந்தும், சிங்கங்களின் குகைகளிலிருந்தும், சிறுத்தைகள் தங்கும் மலைகளிலிருந்தும். 9நீ என் இருதயத்தைக் கவர்ந்துகொண்டாய், என் சகோதரியே, என் மணவாளியே; உன் கண்களின் ஒரே பார்வையினால் நீ என் இருதயத்தைக் கவர்ந்துகொண்டாய், உன் கழுத்தணியின் ஒரே இரத்தினத்தினாலும். 10உன் நேசம் எவ்வளவு அழகாயிருக்கிறது, என் சகோதரியே, என் மணவாளியே! உன் நேசம் திராட்சரசத்தைப் பார்க்கிலும் எவ்வளவு நல்லது, உன் பரிமளதைலங்களின் வாசனை சகல வாசனைப் பொருள்களைப் பார்க்கிலும் எவ்வளவு நல்லது! 11என் மணவாளியே, உன் உதடுகள் தேன்துளிகளை ஒழுகவிடுகிறது; தேனும் பாலும் உன் நாவின்கீழ் இருக்கிறது, உன் வஸ்திரங்களின் வாசனை லீபனோனின் வாசனையைப் போலிருக்கிறது.
12பூட்டப்பட்ட தோட்டம் என் சகோதரியாகிய மணவாளி, அடைக்கப்பட்ட நீரூற்று, முத்திரையிடப்பட்ட ஊற்று. 13உன் தளிர்கள் மாதுளம்பழத் தோப்பு, உயர்ந்த கனிகளையுடையது; மருதோன்றியும் நளதமும், 14நளதமும் குங்குமப்பூவும், வசம்பும் லவங்கப்பட்டையும், சகலவித மரங்களும், சாம்பிராணியும் வெள்ளைப்போளமும் அகிலும், சகல உயர்ந்த வாசனைப் பொருள்களும். a a v14 வசம்பு ஒரு நறுமணமுள்ள வாசனைப் பொருளாகப் பயன்படுத்தப்படும் இனிய வாசனையுள்ள நாணல். 15நீ தோட்டங்களின் நீரூற்று, ஜீவத்தண்ணீரின் கிணறு, லீபனோனிலிருந்து ஓடிவரும் நீரோடைகள். 16வாடைக் காற்றே, விழித்தெழு, தென்றல் காற்றே, வா! என் தோட்டத்தின்மேல் ஊது, அதன் வாசனைப் பொருள்கள் வழிந்தோடட்டும். என் நேசர் தம்முடைய தோட்டத்திற்குள் வந்து, அதின் உயர்ந்த கனிகளைப் புசிப்பாராக.