தாவீது அப்சலோமை விட்டு ஓடுகிறான்
தாவீது தன் குமாரனாகிய அப்சலோமுக்கு விலகி ஓடிப்போனபோது பாடின சங்கீதம்.
3 1 என் பிதாவே, என் சத்துருக்கள் எத்தனை பெருகியிருக்கிறார்கள்! அநேகர் எனக்கு விரோதமாய் எழும்புகிறார்கள்.
2 அநேகர் என்னைக்குறித்து, “அவனுக்குத் தேவனிடத்தில் இரட்சிப்பு இல்லை” என்று சொல்லுகிறார்கள். சேலா. a a v2 சேலா என்பது சங்கீதங்கள் முழுவதும் காணப்படும் ஒரு இசை அல்லது தியானக் குறிப்பாகும் — சொல்லப்பட்டதைக் குறித்து சற்று நிறுத்தி சிந்திக்கும்படியான ஓர் அறிகுறியாக இருக்கலாம். 3 ஆனாலும் என் பிதாவே, நீர் என்னைச் சூழ்ந்திருக்கிற கேடகமும், என் மகிமையும், என் தலையை உயர்த்துகிறவருமாயிருக்கிறீர்.
4 நான் உரத்த சத்தமாய்க் கூப்பிடுகிறேன் என் பிதாவை நோக்கி; அவர் தம்முடைய பரிசுத்த பர்வதத்திலிருந்து எனக்கு உத்தரவு அருளுகிறார். சேலா. 5 நான் படுத்து நித்திரைசெய்தேன்; விழித்துக்கொண்டேன், என் பிதா என்னைத் தாங்குகிறார். 6 என்னைச் சுற்றிலும் நிலைகொண்டிருக்கிற பதினாயிரம் பேருக்கும் நான் பயப்படேன். 7 எழுந்தருளும், என் பிதாவே! என்னை இரட்சியும்! ஏனெனில் என் பிதாவே, நீர் என் சத்துருக்கள் யாவரையும் தாடையில் அடித்தீர்; துன்மார்க்கரின் பற்களை உடைத்துப்போட்டீர். 8 இரட்சிப்பு என் பிதாவுக்கே உரியது. உம்முடைய ஆசீர்வாதம் உம்முடைய ஜனத்தின்மேல் இருப்பதாக. சேலா.