இஸ்ரவேலின் தப்பிப்பிழைப்பின் பாடல்
ஆரோகண பாட்டு.
129 1 “என் சிறுவயதுமுதல் அவர்கள் என்னை மிகவும் ஒடுக்கினார்கள்” — இஸ்ரவேல் இப்பொழுது சொல்வதாக — 2 “என் சிறுவயதுமுதல் அவர்கள் என்னை மிகவும் ஒடுக்கினார்கள், ஆனாலும் அவர்கள் என்னை மேற்கொள்ளவில்லை.” 3 உழுகிறவர்கள் என் முதுகின்மேல் உழுதார்கள்; தங்கள் சால்களை நீளமாக்கினார்கள். 4 எங்கள் பிதா நீதியுள்ளவர்; அவர் துன்மார்க்கரின் கயிறுகளை அறுத்துப்போட்டார்.
5 சீயோனைப் பகைக்கிற யாவரும் வெட்கமடைந்து பின்னிட்டுத் திரும்புவார்களாக. 6 அவர்கள் வீட்டின்மேலுள்ள புல்லைப்போல் ஆவார்களாக, அது வளருமுன் உலர்ந்துபோகிறது, 7 அறுக்கிறவன் தன் கையையும், தானியம் கட்டுகிறவன் தன் மடியையும் அதினால் நிரப்பமாட்டான், 8 கடந்துபோகிறவர்கள் சொல்லமாட்டார்கள், “எங்கள் பிதாவின் ஆசீர்வாதம் உங்கள்மேல் இருப்பதாக! எங்கள் பிதாவின் நாமத்தில் உங்களை ஆசீர்வதிக்கிறோம்.”