எங்கள் பிதா தமது ஜனங்களை எண்ணுகிறார்
1 1அவர்கள் எகிப்து தேசத்தைவிட்டுப் புறப்பட்ட இரண்டாம் வருடத்தின் இரண்டாம் மாதம் முதலாம் நாளிலே, சீனாய் வனாந்தரத்திலே, ஆசரிப்புக் கூடாரத்திலே, எங்கள் பிதா மோசேயுடன் பேசி, சொன்னதாவது:
2“இஸ்ரவேல் புத்திரராகிய முழு சபையையும் அவர்களுடைய வம்சங்களின்படியும் பிதாக்களுடைய குடும்பங்களின்படியும், பேர்பேராக, தலைதலையாக, ஆண்மக்கள் யாவரையும் எண்ணுங்கள். 3இஸ்ரவேலிலே இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட, யுத்தத்திற்குப் புறப்படத்தக்க யாவரையும் நீயும் ஆரோனும் அவர்களுடைய சேனைகளின்படி எண்ணுங்கள். 4ஒவ்வொரு கோத்திரத்திலும் ஒவ்வொருவன் உங்களோடே இருக்கவேண்டும்; அவனவன் தன் பிதாக்களுடைய குடும்பத்துக்குத் தலைவனாயிருக்கவேண்டும்.
5“உங்களோடே கூட நிற்கும் மனிதரின் நாமங்களாவன: ரூபனுடைய கோத்திரத்தில், சேதேயூரின் குமாரனாகிய எலிசூர்;
6“சிமியோனுடைய கோத்திரத்தில், சூரிஷதாயின் குமாரனாகிய செலூமியேல்;
7“யூதாவுடைய கோத்திரத்தில், அம்மினதாபின் குமாரனாகிய நகசோன்;
8“இசகாருடைய கோத்திரத்தில், சூவாரின் குமாரனாகிய நெதனெயேல்;
9“செபுலோனுடைய கோத்திரத்தில், ஏலோனின் குமாரனாகிய எலியாப்;
10“யோசேப்பின் புத்திரரில்: எப்பிராயீம் கோத்திரத்தில், அம்மியூதின் குமாரனாகிய எலிஷாமா; மனாசே கோத்திரத்தில், பெதாசூரின் குமாரனாகிய கமாலியேல்;
11“பென்யமீனுடைய கோத்திரத்தில், கீதெயோனியின் குமாரனாகிய அபீதான்;
12“தாணுடைய கோத்திரத்தில், அம்மிஷதாயின் குமாரனாகிய அகியேசர்;
13“ஆசேருடைய கோத்திரத்தில், ஓகிரானின் குமாரனாகிய பாகியேல்;
14“காத்துடைய கோத்திரத்தில், தேகுயேலின் குமாரனாகிய எலியாசாப்;
15“நப்தலியுடைய கோத்திரத்தில், ஏனானின் குமாரனாகிய அகீரா.
16“இவர்களே சபையிலே அழைக்கப்பட்டவர்களும், தங்கள் பிதாக்களுடைய கோத்திரங்களின் பிரபுக்களும், இஸ்ரவேலின் வம்சங்களுக்குத் தலைவருமானவர்கள்.”
17அப்பொழுது மோசேயும் ஆரோனும் பேர்பேராகக் குறிக்கப்பட்ட இந்த மனிதரைக் கூட்டிக்கொண்டு, 18இரண்டாம் மாதம் முதலாம் நாளிலே முழு சபையையும் கூடிவரச்செய்தார்கள். ஜனங்கள் தங்கள் வம்சங்களின்படியும் பிதாக்களுடைய குடும்பங்களின்படியும் தங்கள் வம்சாவளியைப் பதிவுசெய்தார்கள்; இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட ஆண்மக்கள் யாவரும் பேர்பேராக ஒவ்வொருவராக எண்ணப்பட்டார்கள், 19எங்கள் பிதா மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்தார்கள். அப்படியே மோசே அவர்களைச் சீனாய் வனாந்தரத்திலே எண்ணினான்.
20இஸ்ரவேலின் மூத்த மகனாகிய ரூபனுடைய சந்ததியார்: அவர்களுடைய வம்சங்களின்படியும் பிதாக்களுடைய குடும்பங்களின்படியும் பேர்பேராக, யுத்தத்திற்குப் புறப்படத்தக்க இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட ஆண்மக்கள் யாவரும் எண்ணப்பட்டார்கள். 21ரூபன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள் 46,500 பேர்.
22சிமியோனுடைய சந்ததியார்: அவர்களுடைய வம்சங்களின்படியும் பிதாக்களுடைய குடும்பங்களின்படியும் பேர்பேராக, தலைதலையாக, யுத்தத்திற்குப் புறப்படத்தக்க இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட ஆண்மக்கள் யாவரும் எண்ணப்பட்டார்கள். 23சிமியோன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள் 59,300 பேர்.
24காத்துடைய சந்ததியார்: அவர்களுடைய வம்சங்களின்படியும் பிதாக்களுடைய குடும்பங்களின்படியும் பேர்பேராக, யுத்தத்திற்குப் புறப்படத்தக்க இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட ஆண்மக்கள் யாவரும் எண்ணப்பட்டார்கள். 25காத் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள் 45,650 பேர்.
26யூதாவுடைய சந்ததியார்: அவர்களுடைய வம்சங்களின்படியும் பிதாக்களுடைய குடும்பங்களின்படியும் பேர்பேராக, யுத்தத்திற்குப் புறப்படத்தக்க இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட ஆண்மக்கள் யாவரும் எண்ணப்பட்டார்கள்: 27யூதா கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள் 74,600 பேர்.
28இசகாருடைய சந்ததியார்: அவர்களுடைய வம்சங்களின்படியும் பிதாக்களுடைய குடும்பங்களின்படியும் பேர்பேராக, யுத்தத்திற்குப் புறப்படத்தக்க இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட ஆண்மக்கள் யாவரும் எண்ணப்பட்டார்கள்: 29இசகார் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள் 54,400 பேர்.
30செபுலோனுடைய சந்ததியார்: அவர்களுடைய வம்சங்களின்படியும் பிதாக்களுடைய குடும்பங்களின்படியும் பேர்பேராக, யுத்தத்திற்குப் புறப்படத்தக்க இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட ஆண்மக்கள் யாவரும் எண்ணப்பட்டார்கள். 31செபுலோன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள் 57,400 பேர்.
32யோசேப்பின் புத்திரரில், எப்பிராயீமுடைய சந்ததியார்: அவர்களுடைய வம்சங்களின்படியும் பிதாக்களுடைய குடும்பங்களின்படியும் பேர்பேராக, யுத்தத்திற்குப் புறப்படத்தக்க இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட ஆண்மக்கள் யாவரும் எண்ணப்பட்டார்கள். 33எப்பிராயீம் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள் 40,500 பேர்.
34மனாசேயுடைய சந்ததியார்: அவர்களுடைய வம்சங்களின்படியும் பிதாக்களுடைய குடும்பங்களின்படியும் பேர்பேராக, யுத்தத்திற்குப் புறப்படத்தக்க இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட ஆண்மக்கள் யாவரும் எண்ணப்பட்டார்கள்: 35மனாசே கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள் 32,200 பேர்.
36பென்யமீனுடைய சந்ததியார்: அவர்களுடைய வம்சங்களின்படியும் பிதாக்களுடைய குடும்பங்களின்படியும் பேர்பேராக, யுத்தத்திற்குப் புறப்படத்தக்க இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட ஆண்மக்கள் யாவரும் எண்ணப்பட்டார்கள்: 37பென்யமீன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள் 35,400 பேர்.
38தாணுடைய சந்ததியார்: அவர்களுடைய வம்சங்களின்படியும் பிதாக்களுடைய குடும்பங்களின்படியும் பேர்பேராக, யுத்தத்திற்குப் புறப்படத்தக்க இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட ஆண்மக்கள் யாவரும் எண்ணப்பட்டார்கள்: 39தாண் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள் 62,700 பேர்.
40ஆசேருடைய சந்ததியார்: அவர்களுடைய வம்சங்களின்படியும் பிதாக்களுடைய குடும்பங்களின்படியும் பேர்பேராக, யுத்தத்திற்குப் புறப்படத்தக்க இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட ஆண்மக்கள் யாவரும் எண்ணப்பட்டார்கள். 41ஆசேர் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள் 41,500 பேர்.
42நப்தலியுடைய சந்ததியார்: அவர்களுடைய வம்சங்களின்படியும் பிதாக்களுடைய குடும்பங்களின்படியும் பேர்பேராக, யுத்தத்திற்குப் புறப்படத்தக்க இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட ஆண்மக்கள் யாவரும் எண்ணப்பட்டார்கள். 43நப்தலி கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள் 53,400 பேர்.
44மோசேயும் ஆரோனும் இஸ்ரவேலின் பன்னிரண்டு பிரபுக்களும் இந்த மனிதரை எண்ணினார்கள்; ஒவ்வொருவனும் தன் பிதாக்களுடைய குடும்பத்திற்காக நின்றான். 45இஸ்ரவேலிலே யுத்தத்திற்குப் புறப்படத்தக்க இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட ஆண்மக்கள் யாவரும் தங்கள் பிதாக்களுடைய குடும்பங்களின்படி எண்ணப்பட்டார்கள். 46எண்ணப்பட்டவர்கள் எல்லாரும் 603,550 பேர்.
47ஆனாலும் லேவியர் தங்கள் பிதாக்களுடைய கோத்திரத்தின்படி அவர்களுக்குள்ளே எண்ணப்படவில்லை. 48ஏனெனில் எங்கள் பிதா மோசேயை நோக்கி:
49“லேவி கோத்திரத்தை மாத்திரம் நீ எண்ணாமலும், இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே அவர்களைத் தொகையிடாமலும் இரு. 50லேவியரையோ சாட்சியின் வாசஸ்தலத்தின்மேலும் அதின் சகல தட்டுமுட்டுகளின்மேலும் அதற்குரிய யாவற்றின்மேலும் விசாரிப்புக்காரராக ஏற்படுத்து. அவர்கள் வாசஸ்தலத்தையும் அதின் சகல தட்டுமுட்டுகளையும் சுமந்து, அதற்குப் பணிவிடைசெய்து, வாசஸ்தலத்தைச் சுற்றிலும் பாளயமிறங்கவேண்டும். 51வாசஸ்தலம் புறப்படும்போது, லேவியர் அதைப் பிரித்து இறக்கவேண்டும்; வாசஸ்தலம் இறங்கும்போது, லேவியர் அதை நிறுத்தவேண்டும்; அதைச் சமீபிக்கிற அந்நியன் கொலைசெய்யப்படவேண்டும். 52இஸ்ரவேல் புத்திரர் அவரவர் தங்கள் சேனைகளின்படி, அவரவர் தங்கள் பாளயத்திலும், அவரவர் தங்கள் கொடியண்டையிலும் பாளயமிறங்கவேண்டும். 53இஸ்ரவேல் புத்திரரின் சபையின்மேல் கடுங்கோபம் வராதபடிக்கு, லேவியர் சாட்சியின் வாசஸ்தலத்தைச் சுற்றிலும் பாளயமிறங்கவேண்டும்; லேவியர் சாட்சியின் வாசஸ்தலத்தைக் காக்கவேண்டும்.”
54எங்கள் பிதா மோசேக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் இஸ்ரவேல் புத்திரர் செய்தார்கள்; அப்படியே செய்தார்கள்.