வாசியுங்கள். ஏற்றுக்கொள்ளுங்கள். பரிந்துரையுங்கள்.

♥ மதிப்புரைகள்

நியாயாதிபதிகள் 13

புத்தகம்

பிதாவானவர் ஒரு மகனை வாக்குத்தத்தம் பண்ணுகிறார்

அதிகாரம் 13.

மறுபடியும் இஸ்ரவேலர் எங்கள் பிதாவின் பார்வையில் பொல்லாப்பானதைச் செய்தார்கள்; ஆகையால் அவர் அவர்களை நாற்பது வருஷம் பெலிஸ்தரின் கையில் ஒப்புக்கொடுத்தார்.

தாண் கோத்திரத்தைச் சேர்ந்த சோரா ஊரானாகிய மனோவா என்னும் பேருள்ள ஒரு மனிதன் இருந்தான்; அவன் மனைவி மலடியாயிருந்து பிள்ளை பெறாதிருந்தாள்.

எங்கள் பிதாவின் தூதன் அந்த ஸ்திரீக்குத் தரிசனமாகி, அவளை நோக்கி: “இதோ, நீ மலடியாயிருந்து பிள்ளை பெறாதிருக்கிறாய்; ஆனாலும் நீ கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெறுவாய். இப்போதும் நீ திராட்சரசமும் மதுபானமும் குடியாதபடிக்கும், தீட்டானது ஒன்றையும் புசியாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு. ஏனெனில் நீ கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெறுவாய். அவன் தலையின்மேல் சவரகன் கத்தி படாதிருக்கக்கடவது; அந்தப் பிள்ளை கர்ப்பத்திலிருந்தே எங்கள் பிதாவுக்கு நசரேயனாயிருப்பான்; அவன் இஸ்ரவேலைப் பெலிஸ்தரின் கையிலிருந்து இரட்சிக்கத் தொடங்குவான்.”

அப்பொழுது அந்த ஸ்திரீ போய், தன் புருஷனை நோக்கி: “தேவனுடைய மனிதன் ஒருவர் என்னிடத்தில் வந்தார்; அவருடைய சாயல் எங்கள் பிதாவின் தூதனுடைய சாயலைப்போல மகா பயங்கரமாயிருந்தது; அவர் எங்கேயிருந்து வந்தார் என்று நான் அவரிடத்தில் கேட்கவில்லை, அவர் தம்முடைய நாமத்தை எனக்குச் சொல்லவுமில்லை. ஆனாலும் அவர் என்னை நோக்கி: ‘இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெறுவாய்; இப்போதும் நீ திராட்சரசமும் மதுபானமும் குடியாமலும், தீட்டானது ஒன்றையும் புசியாமலும் இரு; அந்தப் பிள்ளை கர்ப்பத்திலிருந்து தன் மரணநாள்வரைக்கும் எங்கள் பிதாவுக்கு நசரேயனாயிருப்பான்’ என்று சொன்னார்.”

அப்பொழுது மனோவா எங்கள் பிதாவை நோக்கி விண்ணப்பம்பண்ணி: “ஆ, என் ஆண்டவராகிய பிதாவே, நீர் அனுப்பின தேவனுடைய மனிதன் மறுபடியும் எங்களிடத்தில் வந்து, பிறக்கப்போகிற பிள்ளைக்கு நாங்கள் செய்யவேண்டியதை எங்களுக்குப் போதிக்கும்படி தயவுசெய்யும்” என்றான்.

எங்கள் பிதா மனோவாவின் சத்தத்தைக் கேட்டார்; ஸ்திரீ வயலில் உட்கார்ந்திருக்கையில், எங்கள் பிதாவின் தூதன் மறுபடியும் அவளிடத்தில் வந்தான்; அவள் புருஷனாகிய மனோவா அவளோடிருக்கவில்லை. அந்த ஸ்திரீ சீக்கிரமாய் ஓடி, தன் புருஷனுக்கு அறிவித்து: “இதோ, முன்நாளில் என்னிடத்தில் வந்த மனிதன் எனக்குத் தரிசனமானார்” என்றாள்.

மனோவா எழுந்து, தன் மனைவியின் பின்னே போய், அந்த மனிதனிடத்தில் வந்து: “இந்த ஸ்திரீயோடே பேசின மனிதன் நீர்தானா?” என்று கேட்டான். அதற்கு அவர்: “நான்தான்” என்றார்.

அப்பொழுது மனோவா: “உம்முடைய வார்த்தைகள் நிறைவேறும்போது, அந்தப் பிள்ளையின் நடக்கையும் செய்கையும் எப்படியிருக்கவேண்டும்?” என்றான்.

எங்கள் பிதாவின் தூதன் மனோவாவை நோக்கி: “நான் அந்த ஸ்திரீக்குச் சொன்ன எல்லாவற்றைக்குறித்தும் அவள் எச்சரிக்கையாயிருக்கக்கடவள். அவள் திராட்சச்செடியில் உண்டாகிறது ஒன்றையும் புசிக்கவும், திராட்சரசமும் மதுபானமும் குடிக்கவும், தீட்டானது ஒன்றையும் புசிக்கவும் வேண்டாம். நான் அவளுக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் அவள் கைக்கொள்ளக்கடவள்” என்றான்.

அப்பொழுது மனோவா எங்கள் பிதாவின் தூதனை நோக்கி: “தயவுசெய்து சற்று தரித்திரும்; உமக்காக ஒரு வெள்ளாட்டுக்குட்டியை ஆயத்தம்பண்ணுவோம்” என்றான்.

எங்கள் பிதாவின் தூதன் மனோவாவை நோக்கி: “நீ என்னைத் தரிக்கப்பண்ணினாலும், நான் உன் உணவைப் புசிக்கமாட்டேன்; நீ சர்வாங்கதகனபலியை ஆயத்தம்பண்ணுவாயாகில், அதை எங்கள் பிதாவுக்குச் செலுத்து” என்றான். (வந்தவர் எங்கள் பிதாவின் தூதன் என்று மனோவா அறியாதிருந்தான்.)

மனோவா எங்கள் பிதாவின் தூதனை நோக்கி: “உம்முடைய வார்த்தைகள் நிறைவேறும்போது நாங்கள் உம்மைக் கனம்பண்ணும்படிக்கு, உம்முடைய நாமம் என்ன?” என்று கேட்டான்.

எங்கள் பிதாவின் தூதன் அவனை நோக்கி: “நீ என் நாமத்தை ஏன் கேட்கிறாய்? அது அறிந்துகொள்ள முடியாதது” என்றார்.

அப்பொழுது மனோவா வெள்ளாட்டுக்குட்டியையும் போஜனபலியையும் கொண்டுவந்து, மனோவாவும் அவன் மனைவியும் பார்த்துக்கொண்டிருக்கையில், அதைக் கன்மலையின்மேல் அதிசயங்களைச் செய்கிற எங்கள் பிதாவுக்குச் செலுத்தினான். பலிபீடத்திலிருந்து ஜுவாலை வானத்தை நோக்கி எழும்பினபோது, எங்கள் பிதாவின் தூதன் பலிபீடத்தின் ஜுவாலையிலே ஏறிப்போனான்; மனோவாவும் அவன் மனைவியும் அதைக் கண்டு, தரையிலே முகங்குப்புற விழுந்தார்கள். எங்கள் பிதாவின் தூதன் மனோவாவுக்கும் அவன் மனைவிக்கும் அப்புறம் காணப்படவில்லை. அப்பொழுது அவன் எங்கள் பிதாவின் தூதன் என்று மனோவா அறிந்துகொண்டான். மனோவா தன் மனைவியை நோக்கி: “நாம் நிச்சயமாய்ச் சாவோம்; ஏனெனில் எங்கள் பிதாவைக் கண்டோம்” என்றான்.

அதற்கு அவன் மனைவி அவனை நோக்கி: “எங்கள் பிதா நம்மைக் கொல்ல மனதாயிருந்தால், அவர் நம்முடைய கைகளிலிருந்து சர்வாங்கதகனபலியையும் போஜனபலியையும் ஏற்றுக்கொள்ளாமலும், இவைகளையெல்லாம் நமக்குக் காண்பியாமலும், இந்த வேளையில் இப்படிப்பட்டவைகளை நமக்குக் கேட்கப்பண்ணாமலும் இருப்பாரே” என்றாள். அந்த ஸ்திரீ ஒரு மகனைப் பெற்று, அவனுக்குச் சிம்சோன் என்று பேரிட்டாள். அந்தப் பிள்ளை வளர்ந்தது; எங்கள் பிதா அவனை ஆசீர்வதித்தார். சோராவுக்கும் எஸ்தாவோலுக்கும் நடுவான மகனேதாணிலே எங்கள் பிதாவின் ஆவி அவனை ஏவத்தொடங்கினார்.

A young man reading the Father's Heart Bible print edition in a coffee shop இப்போது அச்சில்

கருத்துகள்

இந்த அதிகாரம் உங்களுக்குள் எழுப்பிய எண்ணம், கேள்வி அல்லது ஒரு வார்த்தை — இங்கே பகிருங்கள். ஒவ்வொரு கருத்தும் உங்கள் பெயரைப் பங்களிப்பாளர் சுவரில் சேர்க்கிறது.

வாசிப்பது, கேட்பது, நகலெடுப்பது, பகிர்வது அனைவருக்கும் திறந்திருக்கிறது — கணக்கு தேவையில்லை. கருத்திடுவது, தனிப்படுத்துவது, உங்கள் இடத்தை நினைவில் வைப்பது இலவசக் கணக்குடன் வருகின்றன, ஒவ்வொரு கருத்தும் உங்கள் பெயரைப் பங்களிப்பாளர் சுவரில் சேர்க்கிறது.

குடும்பத்தில் இணையுங்கள் — இலவசம் →
  • இன்னும் கருத்துகள் இல்லை. உங்கள் குரலைச் சேர்க்கும் முதல் நபராக இருங்கள்.