தம்முடைய ஜனத்தைக் கில்காலிலே எங்கள் பிதா புதுப்பிக்கிறார்
5 1எங்கள் பிதா இஸ்ரவேலுக்கு முன்பாக யோர்தானின் தண்ணீரை, அவர்கள் கடந்துபோகுமட்டும் வற்றிப்போகப்பண்ணினார் என்று, யோர்தானுக்கு மேற்கேயிருந்த சகல எமோரிய ராஜாக்களும், கடலோரமாயிருந்த சகல கானானிய ராஜாக்களும் கேள்விப்பட்டபோது, இஸ்ரவேலினிமித்தம் அவர்களுடைய இருதயம் கரைந்துபோயிற்று; அவர்களில் ஒருவருக்கும் ஆவி எஞ்சியிருக்கவில்லை.
2அக்காலத்திலே எங்கள் பிதா யோசுவாவை நோக்கி, "கூர்மையான கற்களினால் கத்திகளை உண்டாக்கி, இஸ்ரவேல் புத்திரரை மறுபடியும், இரண்டாம்முறை விருத்தசேதனம் பண்ணு" என்றார்.
3அப்படியே யோசுவா கூர்மையான கற்களினால் கத்திகளை உண்டாக்கி, மென்தோலின் மேடு என்னும் கிபியாத் ஆரலோத்திலே இஸ்ரவேல் புத்திரரை விருத்தசேதனம் பண்ணினான். 4யோசுவா அவர்களை விருத்தசேதனம் பண்ணின முகாந்தரம் இதுவே: எகிப்திலிருந்து புறப்பட்ட சகல ஜனங்களும், அதாவது ஆண்மக்களும், யுத்தமனிதர் அனைவரும், எகிப்திலிருந்து புறப்பட்டபின் வழியில் வனாந்தரத்திலே செத்துப்போனார்கள். 5புறப்பட்ட ஜனங்கள் யாவரும் விருத்தசேதனம் பண்ணப்பட்டிருந்தார்கள்; ஆனாலும் எகிப்திலிருந்து புறப்பட்ட வழியில் வனாந்தரத்திலே பிறந்தவர்கள் விருத்தசேதனம் பண்ணப்படவில்லை. 6எகிப்திலிருந்து புறப்பட்ட யுத்தமனிதர் என்னும் ஜனங்கள் யாவரும் மடிந்துபோகுமட்டும், இஸ்ரவேல் புத்திரர் நாற்பது வருஷம் வனாந்தரத்திலே நடந்தார்கள்; ஏனெனில் அவர்கள் எங்கள் பிதாவின் சத்தத்திற்குக் கீழ்ப்படியவில்லை. நமக்குத் தருவேன் என்று அவர்களுடைய பிதாக்களுக்கு எங்கள் பிதா ஆணையிட்டுக்கொடுத்த, பாலும் தேனும் ஓடுகிற தேசத்தை அவர்கள் காணமாட்டார்கள் என்று அவர்களுக்கு எங்கள் பிதா ஆணையிட்டிருந்தார். 7அவர்களுடைய ஸ்தானத்திலே அவர்களுடைய பிள்ளைகளை அவர் எழும்பப்பண்ணினார்; அவர்கள் வழியிலே விருத்தசேதனம் பண்ணப்படாதிருந்தபடியால், விருத்தசேதனமில்லாதவர்களாயிருந்த அவர்களை யோசுவா விருத்தசேதனம் பண்ணினான். 8ஜனங்கள் யாவரும் விருத்தசேதனம் பண்ணப்பட்டுத் தீர்ந்தபின்பு, அவர்கள் ஆரோக்கியமாகுமட்டும் பாளயத்திலே தங்கள் ஸ்தானத்திலே இருந்தார்கள்.
9அப்பொழுது எங்கள் பிதா யோசுவாவை நோக்கி, "இன்று உங்கள்மேலிருந்த எகிப்தின் நிந்தையை புரட்டிப்போட்டேன்" என்றார். ஆகையால் அந்த இடம் இந்நாள்வரைக்கும் கில்கால் என்று அழைக்கப்படுகிறது.
10இஸ்ரவேல் புத்திரர் கில்காலிலே பாளயமிறங்கி, மாதத்தின் பதினாலாம் தேதி சாயங்காலத்திலே எரிகோவின் சமபூமியில் பஸ்காவை ஆசரித்தார்கள். 11பஸ்காவின் மறுநாளிலே, அன்றைத்தினமே, அவர்கள் அந்த தேசத்தின் தானியத்தினால் செய்த புளிப்பில்லா அப்பங்களையும், சுட்ட கதிர்களையும் புசித்தார்கள். 12அவர்கள் அந்த தேசத்தின் தானியத்தைப் புசித்த மறுநாளிலே மன்னா ஓய்ந்தது; அப்புறம் இஸ்ரவேல் புத்திரருக்கு மன்னா இல்லாமற்போயிற்று; அந்த வருஷத்திலே கானான் தேசத்தின் விளைச்சலை அவர்கள் புசித்தார்கள்.
எங்கள் பிதாவின் சேனையின் தலைவர்
13யோசுவா எரிகோவின் அருகில் இருந்தபோது, தன் கண்களை ஏறெடுத்துப் பார்த்தான்; இதோ, உருவின பட்டயம் கையில் பிடித்திருந்த ஒரு புருஷன் அவனுக்கு எதிரே நின்றார். யோசுவா அவரிடத்தில் போய், "நீர் எங்கள் பட்சமோ, எங்கள் சத்துருக்களின் பட்சமோ?" என்று கேட்டான்.
14அதற்கு அவர்: "அல்ல; நான் இப்பொழுது எங்கள் பிதாவின் சேனையின் தலைவராய் வந்தேன்" என்றார். அப்பொழுது யோசுவா தரையிலே முகங்குப்புற விழுந்து பணிந்துகொண்டு, அவரை நோக்கி: "என் ஆண்டவர் தம்முடைய அடியேனுக்குச் சொல்லுகிறது என்ன?" என்றான்.
15அப்பொழுது எங்கள் பிதாவின் சேனையின் தலைவர் யோசுவாவை நோக்கி: "உன் கால்களிலிருந்து உன் பாதரட்சைகளைக் கழற்றிப்போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்தமானது" என்றார். யோசுவா அப்படியே செய்தான்.