வாசியுங்கள். ஏற்றுக்கொள்ளுங்கள். பரிந்துரையுங்கள்.

♥ மதிப்புரைகள்

எரேமியா 44

புத்தகம்

எகிப்திலுள்ள யூதருக்கு எங்கள் பிதாவின் எச்சரிப்பு

அதிகாரம் 44.

மிக்தோலிலும், தக்பானேசிலும், நோப்பிலும், பத்ரோஸ் தேசத்திலும் எகிப்தில் குடியிருந்த எல்லா யூதரையும் குறித்து எரேமியாவுக்கு உண்டான வார்த்தை:

பரலோக சேனைகளின் பிதா, இஸ்ரவேலின் எங்கள் பிதா, சொல்லுகிறது என்னவென்றால்: எருசலேமின்மேலும் யூதாவின் எல்லாப் பட்டணங்களின்மேலும் நான் வரப்பண்ணின சகல தீங்கையும் நீங்கள் கண்டீர்கள். இதோ, இந்நாளில் அவைகள் பாழாய்க் கிடக்கின்றன, அவைகளில் குடியிருப்பார் ஒருவரும் இல்லை, அவர்கள் அறியாமலும், நீங்களும் உங்கள் பிதாக்களும் அறியாமலும் இருந்த அந்நிய தேவர்களுக்குத் தூபங்காட்டி, அவைகளைச் சேவித்து, எனக்குக் கோபமூட்டும்படி செய்த தீமையினிமித்தமே இப்படியாயிற்று. ஆயினும் நான் தீர்க்கதரிசிகளாகிய என் ஊழியக்காரர் எல்லாரையும் மீண்டும் மீண்டும் உங்களிடத்தில் அனுப்பி, ‘நான் வெறுக்கிற இந்த அருவருப்பான காரியத்தை நீங்கள் செய்யவேண்டாம்’ என்று சொல்லச்சொன்னேன். ஆனாலும் அவர்கள் அந்நிய தேவர்களுக்குத் தூபங்காட்டுகிற தங்கள் தீமையை விட்டுத் திரும்பாமலும், செவிகொடாமலும் போனார்கள். ஆகையால் என் உக்கிரமும் என் கோபமும் மூண்டு, யூதாவின் பட்டணங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் பற்றியெரிந்தது; அவைகள் இந்நாளில் இருக்கிறபடி பாழும் வனாந்தரமுமாய்ப் போயின.

இப்போதும் பரலோக சேனைகளின் பிதா, இஸ்ரவேலின் எங்கள் பிதா, சொல்லுகிறது என்னவென்றால்: உங்களுக்கு ஒருவரும் மீதியாயிராதபடிக்கு, யூதாவிலிருந்து புருஷனையும் ஸ்திரீயையும் பிள்ளையையும் பாலகனையும் சங்கரிக்கத்தக்கதாக, உங்கள் ஆத்துமாக்களுக்கு விரோதமாய் இத்தனை பெரிய தீங்கை நீங்கள் ஏன் செய்கிறீர்கள்?

“நீங்கள் குடியிருக்கும்படி வந்த எகிப்துதேசத்தில் அந்நிய தேவர்களுக்குத் தூபங்காட்டி, உங்கள் கைகளின் கிரியைகளால் எனக்குக் கோபமூட்டி, உங்களை நீங்களே சங்கரித்துக்கொண்டு, பூமியிலுள்ள சகல ஜாதிகளுக்குள்ளும் சாபமும் நிந்தையுமாகிறீர்கள். யூதாவின் தேசத்திலும் எருசலேமின் வீதிகளிலும் செய்யப்பட்ட உங்கள் பிதாக்களின் பொல்லாப்புகளையும், யூதாவுடைய ராஜாக்களின் பொல்லாப்புகளையும், அவர்களுடைய மனைவிகளின் பொல்லாப்புகளையும், உங்கள் சொந்தப் பொல்லாப்புகளையும், உங்கள் மனைவிகளின் பொல்லாப்புகளையும் நீங்கள் மறந்துவிட்டீர்களா? இந்நாள்வரைக்கும் அவர்கள் மனம்நொறுங்கவும் இல்லை, பயப்படவும் இல்லை, நான் உங்களுக்கும் உங்கள் பிதாக்களுக்கும் முன் வைத்த என் நியாயப்பிரமாணத்தின்படியும் என் கட்டளைகளின்படியும் நடக்கவும் இல்லை.”

ஆகையால் பரலோக சேனைகளின் பிதா, இஸ்ரவேலின் எங்கள் பிதா, சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, தீங்குசெய்யவும், யூதா அனைத்தையும் சங்கரிக்கவும் நான் என் முகத்தை உங்களுக்கு விரோதமாகத் திருப்புகிறேன். “எகிப்துதேசத்தில் போய்க் குடியிருக்கத் தங்கள் முகங்களைத் திருப்பின யூதாவின் மீதியானவர்களை நான் அகற்றிப்போடுவேன்; அவர்கள் எல்லாரும் அழிந்துபோவார்கள், எகிப்துதேசத்தில் விழுவார்கள்; சிறியோர்முதல் பெரியோர்மட்டும் பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் மடிந்து, சாபமும் பயங்கரமும் நிந்தையும் பழிச்சொல்லுமாவார்கள். நான் எருசலேமைத் தண்டித்ததுபோல, எகிப்துதேசத்தில் குடியிருக்கிறவர்களைப் பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் கொள்ளைநோயாலும் தண்டிப்பேன். எகிப்துதேசத்தில் குடியிருக்க வந்த யூதாவின் மீதியானவர்களில் ஒருவரும் தப்பிப்பிழைத்து, தாங்கள் திரும்பவும் குடியிருக்க வாஞ்சிக்கிற யூதாதேசத்துக்குத் திரும்பிப்போவதில்லை; தப்பிய சிலரைத்தவிர வேறொருவரும் திரும்பமாட்டார்கள்.”

அப்பொழுது தங்கள் மனைவிகள் அந்நிய தேவர்களுக்குத் தூபங்காட்டினதை அறிந்திருந்த எல்லாப் புருஷரும், அங்கே நின்ற பெருங்கூட்டமான எல்லா ஸ்திரீகளும், எகிப்துதேசத்தின் பத்ரோஸிலே குடியிருந்த எல்லா ஜனங்களும் எரேமியாவுக்குப் பிரதியுத்தரமாக: “நீ எங்கள் பிதாவின் நாமத்தில் எங்களுக்குச் சொன்ன வார்த்தையின்படி நாங்கள் உனக்குச் செவிகொடோம். இல்லை; நாங்களும் எங்கள் பிதாக்களும் எங்கள் ராஜாக்களும் எங்கள் பிரபுக்களும் யூதாவின் பட்டணங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் செய்ததுபோல, வானராக்கினிக்குத் தூபங்காட்டி, அவளுக்குப் பானபலிகளை வார்த்து, நாங்கள் நேர்ந்துகொண்ட எல்லாப் பொருத்தனைகளின்படியும் நிச்சயமாய்ச் செய்வோம்; அப்பொழுது நாங்கள் அப்பத்தினால் திருப்தியாகி, செழிப்படைந்து, ஒரு தீங்கையும் காணாமல் இருந்தோம். a a v17 வானராக்கினி என்பவள் பூர்வ கீழ்த்திசைநாடுகளில் பிரபலமாயிருந்த வளத்தின் தேவதை; இவள் அஸ்தரோத் அல்லது இஷ்தார் எனப்படுபவளாயிருக்கக்கூடும்; யூதாவில் இவள் பரவலாக ஆராதிக்கப்பட்டாள். ஆனாலும் நாங்கள் வானராக்கினிக்குத் தூபங்காட்டுகிறதையும் அவளுக்குப் பானபலிகளை வார்க்கிறதையும் விட்டதுமுதல், எல்லாவற்றிலும் குறைவுபட்டு, பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் அழிந்துபோகிறோம்.”

ஸ்திரீகள் மேலும்: “நாங்கள் வானராக்கினிக்குத் தூபங்காட்டி, அவளுக்குப் பானபலிகளை வார்த்தபோது, எங்கள் புருஷரின் சம்மதமில்லாமலா அவளுக்கு அடையாளமாக அப்பங்களைச் சுட்டு, அவளுக்குப் பானபலிகளை வார்த்தோம்?” என்றார்கள்.

அப்பொழுது எரேமியா இப்படித் தனக்கு உத்தரவு சொன்ன புருஷர் ஸ்திரீகளாகிய சகல ஜனங்களையும் நோக்கிச் சொன்னது: “நீங்களும் உங்கள் பிதாக்களும் உங்கள் ராஜாக்களும் உங்கள் பிரபுக்களும் தேசத்தின் ஜனங்களும் யூதாவின் பட்டணங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் காட்டின தூபத்தை எங்கள் பிதா நினையாதிருந்தாரோ? அது அவருடைய மனதிற்கு வராதிருந்ததோ? உங்கள் துர்க்கிரியைகளினிமித்தமும், நீங்கள் செய்த அருவருப்புகளினிமித்தமும் எங்கள் பிதா அதைப் பொறுத்திருக்கக்கூடாமற்போனார்; ஆகையால் இந்நாளில் இருக்கிறபடி உங்கள் தேசம் பாழும் பயங்கரமும் சாபமும் குடியில்லாத இடமுமாய்ப் போயிற்று. நீங்கள் தூபங்காட்டி, எங்கள் பிதாவுக்கு விரோதமாகப் பாவஞ்செய்து, அவருடைய சத்தத்துக்குக் கீழ்ப்படியாமலும், அவருடைய நியாயப்பிரமாணத்தின்படியும் அவருடைய கட்டளைகளின்படியும் அவருடைய சாட்சிகளின்படியும் நடவாமலும் போனபடியினால், இந்நாளில் இருக்கிறபடி இந்தத் தீங்கு உங்களுக்கு நேரிட்டது.”

பின்னும் எரேமியா சகல ஜனங்களையும் சகல ஸ்திரீகளையும் நோக்கி: “எகிப்துதேசத்திலுள்ள யூதாவே, நீங்கள் எல்லாரும் எங்கள் பிதாவின் வார்த்தையைக் கேளுங்கள்.

பரலோக சேனைகளின் பிதா, இஸ்ரவேலின் தேவன், சொல்லுகிறது என்னவென்றால்: நீங்களும் உங்கள் மனைவிகளும் உங்கள் வாய்களினால், ‘நாங்கள் நேர்ந்துகொண்ட பொருத்தனைகளை நிச்சயமாய்ச் செலுத்தி, வானராக்கினிக்குத் தூபங்காட்டி, அவளுக்குப் பானபலிகளை வார்ப்போம்’ என்று சொல்லி, உங்கள் கைகளினால் அதை நிறைவேற்றினீர்கள்; ஆகையால் உங்கள் பொருத்தனைகளை நிலைநிறுத்துங்கள்; அவைகளைச் செலுத்தித் தீருங்கள்!”

“ஆதலால் எகிப்துதேசத்தில் குடியிருக்கிற சகல யூதாவே, எங்கள் பிதாவின் வார்த்தையைக் கேளுங்கள்: இதோ, ‘ஆண்டவராகிய பிதாவின் ஜீவனைக்கொண்டு’ என்று சொல்லி, எகிப்துதேசம் எங்குமுள்ள யூதா மனுஷரில் ஒருவரும் இனி என் நாமத்தைச் சொல்லாதபடிக்கு, என் மகத்துவமான நாமத்தைக்கொண்டு ஆணையிட்டேன் என்று அவர் சொல்லுகிறார். இதோ, நன்மைக்கல்ல, தீமைக்கே நான் அவர்கள்மேல் ஜாக்கிரதையாயிருக்கிறேன்; எகிப்துதேசத்திலுள்ள யூதா மனுஷர் யாவரும் ஒருவரும் மீதியாயிராதபடிக்கு, பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் மடிந்துபோவார்கள். பட்டயத்துக்குத் தப்பின சிலர்மாத்திரம் எகிப்துதேசத்திலிருந்து யூதாதேசத்துக்குத் திரும்புவார்கள்; அப்பொழுது எகிப்துதேசத்தில் குடியிருக்கும்படி போன யூதாவின் மீதியானவர்கள் யாவரும் என்னுடைய வார்த்தையோ தங்களுடைய வார்த்தையோ எது நிலைக்கும் என்று அறிந்துகொள்வார்கள்.”

இந்த இடத்தில் நான் உங்களைத் தண்டிப்பேன் என்பதற்கும், உங்களுக்கு விரோதமான என் வார்த்தைகள் தீங்குக்கென்று நிச்சயமாய் நிறைவேறும் என்பதை நீங்கள் அறியும்படிக்கும், இதுவே உங்களுக்கு அடையாளம் என்று எங்கள் பிதா சொல்லுகிறார். எங்கள் பிதா சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவை அவனுக்குச் சத்துருவும் அவனுடைய பிராணனை வாஞ்சித்தவனுமான பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் கையில் நான் ஒப்புக்கொடுத்ததுபோல, எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் ஓப்ரா என்பவனை, அவனுடைய பிராணனை வாஞ்சிக்கிற அவனுடைய சத்துருக்களின் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்கிறார்.”

A young man reading the Father's Heart Bible print edition in a coffee shop இப்போது அச்சில்

கருத்துகள்

இந்த அதிகாரம் உங்களுக்குள் எழுப்பிய எண்ணம், கேள்வி அல்லது ஒரு வார்த்தை — இங்கே பகிருங்கள். ஒவ்வொரு கருத்தும் உங்கள் பெயரைப் பங்களிப்பாளர் சுவரில் சேர்க்கிறது.

வாசிப்பது, கேட்பது, நகலெடுப்பது, பகிர்வது அனைவருக்கும் திறந்திருக்கிறது — கணக்கு தேவையில்லை. கருத்திடுவது, தனிப்படுத்துவது, உங்கள் இடத்தை நினைவில் வைப்பது இலவசக் கணக்குடன் வருகின்றன, ஒவ்வொரு கருத்தும் உங்கள் பெயரைப் பங்களிப்பாளர் சுவரில் சேர்க்கிறது.

குடும்பத்தில் இணையுங்கள் — இலவசம் →
  • இன்னும் கருத்துகள் இல்லை. உங்கள் குரலைச் சேர்க்கும் முதல் நபராக இருங்கள்.