நான் உன்னை ஒருபோதும் அனுப்பிவிடவில்லை
50 1எங்கள் பிதா சொல்லுகிறது இதுவே: “நான் உன் தாயை அனுப்பிவிட்ட அவளுடைய விவாகரத்துப் பத்திரம் எங்கே? அல்லது என் கடன்காரர்களில் யாருக்கு நான் உங்களை விற்றேன்? இதோ, உங்கள் பாவங்களினிமித்தம் நீங்கள் விற்கப்பட்டீர்கள்; உங்கள் அக்கிரமங்களினிமித்தம் உங்கள் தாய் அனுப்பிவிடப்பட்டாள். 2நான் வந்தபோது ஒருவனும் இல்லாமற்போனதென்ன? நான் கூப்பிட்டபோது மறுஉத்தரவு சொல்ல ஒருவனும் இல்லாமற்போனதென்ன? மீட்கிறதற்கு என் கை குறுகிப்போயிற்றோ? அல்லது விடுவிக்கிறதற்கு எனக்கு வல்லமையில்லையோ? இதோ, என் கடிந்துகொள்ளுதலினால் கடலை வற்றிப்போகப்பண்ணுகிறேன், நதிகளை வனாந்தரமாக்குகிறேன்; அவைகளின் மீன்கள் தண்ணீரில்லாமையால் நாறி, தாகத்தால் சாகும். 3நான் வானங்களைக் காரிருளால் உடுத்தி, இரட்டை அவைகளுக்கு மூடாக்கிப்போடுகிறேன்.”
4என் ஆண்டவராகிய பிதா எனக்குக் கல்விமானின் நாவைத் தந்திருக்கிறார்; அப்படியே இளைத்தவனுக்கு ஏற்றமான வார்த்தையைச் சொல்ல அறிவேன். காலைதோறும் அவர் என்னை எழுப்பி, கல்விமான் கேட்பதுபோல் கேட்க என் செவியைக் கவனிக்கப்பண்ணுகிறார். a a v4 ஏசாயாவின் மூன்றாம் ஊழியக்காரப் பாடல் — இயேசு, காலைதோறும் தம்முடைய பிதாவினிடத்தில் கற்றுக்கொள்ளும் கீழ்ப்படிதலுள்ள குமாரனாகப் பேசுகிறார். சிலுவையிலுள்ள பாடுகளின் விவரிப்புகள் இந்தக் காட்சியை எதிரொலிக்கின்றன. 5என் ஆண்டவராகிய பிதா என் செவியைத் திறந்தார்; நான் மறுத்துப்பேசவில்லை; நான் பின்வாங்கவும் இல்லை. 6அடிக்கிறவர்களுக்கு என் முதுகையும், தாடிமயிரைப் பிடுங்குகிறவர்களுக்கு என் கன்னங்களையும் ஒப்புக்கொடுத்தேன்; அவமானத்துக்கும் உமிழ்நீருக்கும் என் முகத்தை நான் மறைக்கவில்லை. 7ஆனாலும் என் ஆண்டவராகிய பிதா எனக்கு உதவிசெய்கிறார்; ஆகையால் நான் வெட்கப்படுவதில்லை; ஆகையால் என் முகத்தைக் கருங்கல்லுக்கொப்பாக ஆக்கினேன், நான் வெட்கப்பட்டுப்போவதில்லையென்று அறிந்திருக்கிறேன். 8என்னை நீதிமானாக்குகிறவர் சமீபமாயிருக்கிறார். என்னோடே வழக்காடுகிறவன் யார்? நாம் ஏகமாய் நிற்போம். எனக்கு எதிராளியானவன் யார்? அவன் என்னிடத்தில் கிட்டவரட்டும். 9இதோ, என் ஆண்டவராகிய பிதா எனக்கு உதவிசெய்கிறார்; என்னைக் குற்றவாளியாகத் தீர்ப்பவன் யார்? இதோ, அவர்களெல்லாரும் வஸ்திரம்போலப் பழையதாய்ப்போவார்கள்; பொட்டுப்பூச்சி அவர்களை அரித்துப்போடும்.
10உங்களில் எங்கள் பிதாவுக்குப் பயந்து, அவருடைய ஊழியக்காரனுடைய சத்தத்துக்குக் கீழ்ப்படிகிறவன் யார்? இருளிலே நடக்கிறவனும் வெளிச்சமில்லாதவனும் அவருடைய நாமத்தை நம்பி, தன் பிதாவைச் சார்ந்துகொள்ளக்கடவன். 11இதோ, நெருப்பை மூட்டுகிற நீங்கள் அனைவரும், எரிகொள்ளிகளால் உங்களை ஆயுதம்பண்ணிக்கொள்ளுகிறவர்களே: உங்கள் நெருப்பின் வெளிச்சத்திலும், நீங்கள் மூட்டின எரிகொள்ளிகளின் நடுவிலும் நடவுங்கள்! நீங்கள் என் கரத்தினால் பெறுவது இதுவே: வேதனையிலே படுத்துக்கிடப்பீர்கள்.