அஸ்தோத் அசீரியாவுக்கு வீழ்ச்சியடைகிறது
20 1அசீரியாவின் ராஜாவாகிய சர்கோனால் அனுப்பப்பட்ட படைத்தலைவன் அஸ்தோத்துக்கு வந்து, அஸ்தோத்தின்மேல் யுத்தம்பண்ணி அதைப் பிடித்த வருஷத்திலே,
2அக்காலத்திலே எங்கள் பிதா ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயாவைக்கொண்டு: “உன் இடுப்பிலிருந்த இரட்டை அவிழ்த்து, உன் கால்களிலிருந்த பாதரட்சைகளைக் கழற்றிப்போடு” என்றார். அவன் அப்படியே செய்து, வஸ்திரமில்லாமலும் வெறுங்காலோடும் நடந்தான். 3அப்பொழுது எங்கள் பிதா சொன்னதாவது: “எகிப்துக்கும் கூஷுக்கும் விரோதமான ஓர் அடையாளமும் குறிப்புமாய், என் ஊழியக்காரனாகிய ஏசாயா மூன்று வருஷம் வஸ்திரமில்லாமலும் வெறுங்காலோடும் நடந்ததுபோல, a a v3 கூஷ் என்பது இப்பொழுது சூடானையும் வடக்கு எத்தியோப்பியாவையும் உள்ளடக்கிய பிரதேசத்தின் பூர்வீக நாமம். 4அப்படியே அசீரியாவின் ராஜா எகிப்தின் சிறைபிடிக்கப்பட்டவர்களையும் கூஷின் அடிமைகளையும், இளைஞரையும் முதியோரையும், நிர்வாணமாகவும் வெறுங்காலோடும் பிட்டம் திறந்தவர்களாகவும் ஓட்டிக்கொண்டுபோய், எகிப்தின் வெட்கத்தை வெளிப்படுத்துவான். 5அப்பொழுது அவர்கள் தங்கள் நம்பிக்கையாகிய கூஷினிமித்தமும், தங்கள் பெருமையாகிய எகிப்தினிமித்தமும் கலங்கி வெட்கப்படுவார்கள். 6அந்நாளிலே இந்தக் கடற்கரை நாட்டு மக்கள்: ‘அசீரியாவின் ராஜாவினின்று விடுவிக்கப்படும்படி நாம் உதவிக்காக ஓடிச்சென்று நம்பியிருந்ததின் கதியைப் பாருங்கள்! நாம் எப்படித் தப்பிப்போம்?’ என்பார்கள்.”