நெருப்புக்கேயன்றி வேறொன்றுக்கும் உதவாத திராட்சச்செடி
15 1பின்பு எங்கள் பிதாவின் வார்த்தை எனக்கு உண்டாகி, அவர் சொன்னது:
2"மனுஷகுமாரனே, காட்டு மரங்களுக்குள்ளே இருக்கிற திராட்சக்கொடியாகிய திராட்சச்செடியின் மரம் மற்ற எந்த மரத்தைப்பார்க்கிலும் எதினால் மேன்மையுள்ளது? 3ஏதாவது ஒரு வேலைக்கு உதவும்படி அதின் மரத்தில் எதையாவது செய்யக்கூடுமா? பொருள்களைத் தூக்கிவைக்கும்படி அதிலிருந்து ஒரு முளையையாகிலும் செய்யக்கூடுமா? 4இதோ, அது எரிபொருளாக நெருப்புக்கு இரையாய்ப் போடப்படுகிறது; அதின் இரண்டு முனைகளையும் நெருப்பு தின்றுவிடுகிறது, அதின் நடுப்பாகமும் கருகிப்போகிறது. இது ஏதாவது வேலைக்கு உதவுமா? 5அது முழுமையாய் இருந்தபோதே உதவாததாயிருந்தால், நெருப்பு அதைப் பட்சித்து அது கருகிப்போனபின்பு அது இன்னும் எவ்வளவு குறைவாய் ஏதாவது ஒன்றுக்கு உதவும்? அதில் ஏதாவது செய்யக்கூடுமா?"
6ஆகையால் ஆண்டவராகிய பிதா சொல்லுகிறது: "காட்டு மரங்களுக்குள்ளே இருக்கிற திராட்சச்செடியின் மரத்தை நான் எரிபொருளாக நெருப்புக்கு ஒப்புக்கொடுத்ததுபோல, எருசலேமில் வாசம்பண்ணுகிறவர்களையும் நான் ஒப்புக்கொடுத்தேன். 7நான் என் முகத்தை அவர்களுக்கு விரோதமாகத் திருப்புவேன்; அவர்கள் ஒரு நெருப்புக்குத் தப்பினாலும், மற்றொரு நெருப்பு அவர்களைப் பட்சிக்கும்; நான் என் முகத்தை அவர்களுக்கு விரோதமாகத் திருப்பும்போது, நானே உங்கள் பிதா என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். 8அவர்கள் மிகவும் துரோகம்பண்ணினபடியால், நான் தேசத்தைப் பாழாய்ப்போகச்செய்வேன் என்று ஆண்டவராகிய பிதா சொல்லுகிறார்."