வாசியுங்கள். ஏற்றுக்கொள்ளுங்கள். பரிந்துரையுங்கள்.

♥ மதிப்புரைகள்

எஸ்தர் 6

புத்தகம்

ராஜா மொர்தெகாயைக் கனப்படுத்துகிறார்

அதிகாரம் 6.

அன்று இரவில் ராஜாவுக்கு நித்திரை வராதிருந்தது; ஆகையால் நடபடிகள் எழுதியிருந்த நாளாகமப் புத்தகத்தைக் கொண்டுவந்து தமக்கு முன்பாக வாசிக்கும்படி கட்டளையிட்டார். வாசலைக் காவல்காத்த ராஜாவின் இரண்டு பிரதானிகளாகிய பிக்தானாவும் தேரேசும் அகாஸ்வேரு ராஜாவைக் கொலைசெய்யத் தேடினதை மொர்தெகாய் தெரிவித்தான் என்று எழுதப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அப்பொழுது ராஜா: “இதற்காக மொர்தெகாய்க்கு என்ன கனமும் மேன்மையும் கிடைத்தது?” என்று கேட்டார். அதற்கு அவருக்குப் பணிவிடை செய்கிறவர்கள்: “அவனுக்கு ஒன்றும் செய்யப்படவில்லை” என்றார்கள்.

“அரண்மனை முற்றத்தில் இருக்கிறது யார்?” என்று ராஜா கேட்டார். அப்பொழுது ஆமான் தான் ஆயத்தம்பண்ணியிருந்த தூக்குமரத்தில் மொர்தெகாயைத் தூக்கிப்போடும்படி ராஜாவிடம் கேட்பதற்காக, அரண்மனையின் வெளிமுற்றத்தில் வந்திருந்தான்.

ராஜாவுக்குப் பணிவிடை செய்கிறவர்கள் அவரை நோக்கி: “இதோ, ஆமான் முற்றத்தில் நிற்கிறான்” என்றார்கள். “அவனை உள்ளே வரச்சொல்லுங்கள்” என்று ராஜா சொன்னார்.

ஆமான் உள்ளே வந்தான். ராஜா அவனை நோக்கி: “ராஜா கனப்படுத்த விரும்புகிற மனுஷனுக்கு என்ன செய்யப்படவேண்டும்?” என்று கேட்டார். அதற்கு ஆமான்: “என்னைவிட அதிகமாய் ராஜா யாரைக் கனப்படுத்த விரும்புவார்?” என்று தன் உள்ளத்திலே நினைத்து,

ராஜாவை நோக்கி: “ராஜா கனப்படுத்த விரும்புகிற மனுஷனுக்கு, ராஜா அணிந்துகொண்ட ராஜஉடையையும், ராஜா ஏறின குதிரையையும், அவர் சிரசில் வைக்கப்படும் ராஜமுடியையும் கொண்டுவரக்கடவர்கள். அந்த உடையும் குதிரையும் ராஜாவின் பிரபுக்களாகிய உயர் அதிகாரிகளில் ஒருவன் கையில் ஒப்புவிக்கப்படவேண்டும்; ராஜா கனப்படுத்த விரும்புகிற மனுஷனுக்கு அந்த உடையை உடுத்தி, அவனைக் குதிரையின்மேல் ஏற்றி, நகரவீதி வழியாய்ப் பவனி கொண்டுபோய், ‘ராஜா கனப்படுத்த விரும்புகிற மனுஷனுக்கு இப்படியே செய்யப்படும்!’ என்று அவனுக்கு முன்பாகக் கூறவேண்டும்” என்றான்.

அப்பொழுது ராஜா ஆமானை நோக்கி: “நீ சீக்கிரமாய்ப் போய், நீ சொன்னபடியே அந்த உடையையும் குதிரையையும் எடுத்துக்கொண்டு, ராஜாவின் வாசலில் உட்கார்ந்திருக்கிற யூதனாகிய மொர்தெகாய்க்கு அப்படியே செய்; நீ சொன்னதில் ஒன்றையும் விட்டுவிடாதே” என்றார்.

ஆமான் அந்த உடையையும் குதிரையையும் எடுத்துக்கொண்டு, மொர்தெகாய்க்கு உடையை உடுத்தி, அவனைக் குதிரையின்மேல் ஏற்றி, நகரவீதி வழியாய்ப் பவனி கொண்டுபோய், “ராஜா கனப்படுத்த விரும்புகிற மனுஷனுக்கு இப்படியே செய்யப்படும்” என்று அவனுக்கு முன்பாகக் கூறினான்.

பின்பு மொர்தெகாய் ராஜாவின் வாசலுக்குத் திரும்பிவந்தான்; ஆனால் ஆமானோ துக்கப்பட்டு, தன் தலையை மூடிக்கொண்டு, வேகமாய்த் தன் வீட்டுக்குப் போய்விட்டான். ஆமான் தனக்கு நடந்த எல்லாவற்றையும் தன் மனைவியாகிய சிரேஷுக்கும் தன் சிநேகிதர் அனைவருக்கும் சொன்னான். அப்பொழுது அவனுடைய ஆலோசனைக்காரரும் அவன் மனைவியாகிய சிரேஷும் அவனை நோக்கி: “எவனுக்கு முன்பாக நீ விழத்தொடங்கினாயோ அந்த மொர்தெகாய் யூத வம்சத்தானாயிருந்தால், நீ அவனை மேற்கொள்ளமாட்டாய்; அவனுக்கு முன்பாக நிச்சயமாய் விழுந்துபோவாய்” என்றார்கள். அவர்கள் அவனோடே இன்னும் பேசிக்கொண்டிருக்கையில், ராஜாவின் பிரதானிகள் வந்து, எஸ்தர் ஆயத்தம்பண்ணியிருந்த விருந்துக்கு ஆமானை விரைவாய் அழைத்துக்கொண்டுபோனார்கள்.

A young man reading the Father's Heart Bible print edition in a coffee shop இப்போது அச்சில்

கருத்துகள்

இந்த அதிகாரம் உங்களுக்குள் எழுப்பிய எண்ணம், கேள்வி அல்லது ஒரு வார்த்தை — இங்கே பகிருங்கள். ஒவ்வொரு கருத்தும் உங்கள் பெயரைப் பங்களிப்பாளர் சுவரில் சேர்க்கிறது.

வாசிப்பது, கேட்பது, நகலெடுப்பது, பகிர்வது அனைவருக்கும் திறந்திருக்கிறது — கணக்கு தேவையில்லை. கருத்திடுவது, தனிப்படுத்துவது, உங்கள் இடத்தை நினைவில் வைப்பது இலவசக் கணக்குடன் வருகின்றன, ஒவ்வொரு கருத்தும் உங்கள் பெயரைப் பங்களிப்பாளர் சுவரில் சேர்க்கிறது.

குடும்பத்தில் இணையுங்கள் — இலவசம் →
  • இன்னும் கருத்துகள் இல்லை. உங்கள் குரலைச் சேர்க்கும் முதல் நபராக இருங்கள்.