மோசேயின் பிரியாவிடை உரை
31 1அப்பொழுது மோசே போய், இந்த வார்த்தைகளை இஸ்ரவேலர் அனைவரோடும் பேசினான். 2அவன் அவர்களை நோக்கி: “இன்று நான் நூற்றிருபது வயதுள்ளவன்; இனி நான் போக்கவும் வரவும் என்னால் கூடாது; ‘நீ இந்த யோர்தானைக் கடந்துபோவதில்லை’ என்று எங்கள் பிதா என்னிடம் சொல்லியிருக்கிறார். 3உங்கள் பிதா தாமே உங்களுக்கு முன்பாகக் கடந்துபோவார்; அவர் இந்த ஜாதிகளை உங்களுக்கு முன்பாக அழிப்பார், நீங்கள் அவர்களைத் துரத்திவிடுவீர்கள். எங்கள் பிதா சொன்னபடியே, யோசுவா உங்களுக்கு முன்பாகக் கடந்துபோவான். 4எமோரியரின் ராஜாக்களாகிய சீகோனுக்கும் ஓகுக்கும், அவர்கள் தேசத்துக்கும் எங்கள் பிதா செய்து அவர்களை அழித்ததுபோல, இவர்களுக்கும் செய்வார். 5எங்கள் பிதா அவர்களை உங்களிடம் ஒப்புக்கொடுப்பார்; நான் உங்களுக்குக் கட்டளையிட்டபடியே நீங்கள் அவர்களுக்குச் செய்யவேண்டும். 6பலங்கொண்டு திடமனதாயிருங்கள். அவர்களுக்குப் பயப்படாமலும் அஞ்சாமலும் இருங்கள்; ஏனெனில் உங்கள் பிதா உங்களோடேகூட போகிறார்; அவர் உங்களைக் கைவிடவுமாட்டார், உங்களைவிட்டு விலகவுமாட்டார்.”
7மோசே யோசுவாவை அழைத்து, இஸ்ரவேலர் அனைவருக்கும் முன்பாக அவனை நோக்கி: “பலங்கொண்டு திடமனதாயிரு; எங்கள் பிதா இந்த ஜனங்களின் முற்பிதாக்களுக்குக் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசத்திற்கு நீ இவர்களோடேகூடப் போவாய்; அதை நீ இவர்களுக்குச் சுதந்தரமாகப் பங்கிட்டுக் கொடுப்பாய். 8எங்கள் பிதா தாமே உனக்கு முன்பாகப் போகிறார்; அவர் உன்னோடேகூட இருப்பார்; அவர் உன்னைக் கைவிடவுமாட்டார், உன்னைவிட்டு விலகவுமாட்டார்; பயப்படாதே, கலங்காதே.”
இஸ்ரவேலுக்கு ஒப்படைக்கப்பட்ட நியாயப்பிரமாணம்
9மோசே இந்த நியாயப்பிரமாணத்தை எழுதி, எங்கள் பிதாவின் உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்த லேவியின் குமாரராகிய ஆசாரியர்களிடமும், இஸ்ரவேலின் மூப்பர்கள் அனைவரிடமும் ஒப்புவித்தான். 10பின்பு மோசே அவர்களுக்குக் கட்டளையிட்டதாவது: “ஏழு வருஷத்தின் முடிவிலே, விடுதலை வருஷமாகிய குறித்த காலத்திலே, கூடாரப் பண்டிகையிலே, a a v10 கூடாரப் பண்டிகை: இஸ்ரவேலரின் வனாந்தரப் பயணத்தை நினைவுகூரும்படி குடும்பங்கள் தற்காலிகக் கூடாரங்களைக் கட்டி அவற்றில் தங்கிய, இலையுதிர்காலத்தில் ஒரு வாரம் நீடிக்கும் அறுவடைக் கொண்டாட்டம். 11இஸ்ரவேலர் அனைவரும் உங்கள் பிதா தெரிந்துகொள்ளும் ஸ்தலத்திலே அவருடைய சந்நிதியில் வரும்போது, இந்த நியாயப்பிரமாணத்தை இஸ்ரவேலர் எல்லாருக்கும் கேட்கும்படி வாசிக்கவேண்டும். 12ஜனங்களாகிய புருஷரையும், ஸ்திரீகளையும், பிள்ளைகளையும், உங்கள் வாசல்களில் தங்கியிருக்கிற அந்நியரையும் கூட்டிச்சேருங்கள்; அவர்கள் கேட்டுக் கற்றுக்கொண்டு, உங்கள் பிதாவுக்குப் பயந்து, இந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளையெல்லாம் கைக்கொண்டு செய்யும்படிக்கே. 13அப்பொழுது, இந்த நியாயப்பிரமாணத்தை அறியாத அவர்களுடைய பிள்ளைகளும் அதைக் கேட்டு, நீங்கள் சுதந்தரிக்கும்படி யோர்தானைக் கடந்துபோகிற தேசத்தில் நீங்கள் உயிரோடிருக்கும் நாளெல்லாம் உங்கள் பிதாவுக்குப் பயப்படக் கற்றுக்கொள்வார்கள்.”
எங்கள் பிதா யோசுவாவை நியமிக்கிறார்
14எங்கள் பிதா மோசேயை நோக்கி: “இதோ, நீ மரிக்கும் நாள் சமீபித்திருக்கிறது; யோசுவாவை அழைத்து, நான் அவனுக்குக் கட்டளை கொடுக்கும்படி ஆசரிப்புக் கூடாரத்தில் வந்து நில்லுங்கள்” என்றார். அப்படியே மோசேயும் யோசுவாவும் போய், ஆசரிப்புக் கூடாரத்தில் வந்து நின்றார்கள்.
15அப்பொழுது எங்கள் பிதா மேகஸ்தம்பத்தில் கூடாரத்தில் தரிசனமானார்; அந்த மேகஸ்தம்பம் கூடாரவாசலில் நின்றது. 16எங்கள் பிதா மோசேயை நோக்கி: “இதோ, நீ உன் முற்பிதாக்களோடே படுத்துக்கொள்ளப்போகிறாய்; அப்பொழுது இந்த ஜனங்கள் எழும்பி, தாங்கள் போய்ச் சேரும் தேசத்தின் அந்நிய தேவர்களைப் பின்பற்றி வேசித்தனம்பண்ணி, என்னைவிட்டு விலகி, நான் அவர்களோடே பண்ணின உடன்படிக்கையை மீறுவார்கள். 17அந்நாளிலே என் கோபம் அவர்கள்மேல் மூண்டெழும்பும்; நான் அவர்களைக் கைவிட்டு, என் முகத்தை அவர்களுக்கு மறைப்பேன்; அவர்கள் பட்சிக்கப்படுவார்கள்; அநேக தீங்குகளும் இடுக்கண்களும் அவர்கள்மேல் வரும்; அந்நாளிலே அவர்கள்: ‘நம்முடைய தேவன் நம்மோடே இராதபடியால் அல்லவோ இந்தத் தீங்குகள் நம்மேல் வந்தது?’ என்பார்கள். 18அவர்கள் அந்நிய தேவர்களிடமாய்த் திரும்பிச் செய்த எல்லாப் பொல்லாப்புகளினிமித்தமும், அந்நாளிலே நான் நிச்சயமாய் என் முகத்தை மறைப்பேன்.
19இப்பொழுது இந்தப் பாட்டை உங்களுக்காக எழுதிக்கொண்டு, இதை இஸ்ரவேல் புத்திரருக்குக் கற்பித்து, இந்தப் பாட்டு இஸ்ரவேல் புத்திரருக்கு விரோதமாய் எனக்குச் சாட்சியாயிருக்கும்படி, இதை அவர்கள் வாயில் வழங்கச்செய்யுங்கள். 20நான் அவர்கள் முற்பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த, பாலும் தேனும் ஓடுகிற தேசத்தில் அவர்களைக் கொண்டுவந்தபின், அவர்கள் புசித்து, திருப்தியடைந்து, கொழுத்துப்போய், அந்நிய தேவர்களிடமாய்த் திரும்பி அவர்களைச் சேவித்து, என்னை அசட்டைபண்ணி, என் உடன்படிக்கையை மீறுவார்கள். 21அநேக தீங்குகளும் இடுக்கண்களும் அவர்களைத் தொடர்ந்து பிடிக்கும்போது, இந்தப் பாட்டு அவர்களுக்கு விரோதமாய்ச் சாட்சியாக எதிர்நிற்கும்; ஏனெனில் இது அவர்கள் சந்ததியாரின் வாயிலிருந்து மறந்துபோவதில்லை. நான் அவர்களுக்குக் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசத்தில் அவர்களைக் கொண்டுவருமுன்னே, இன்று அவர்கள் கொண்டிருக்கிற எண்ணத்தை நான் அறிவேன்” என்றார்.
22அப்படியே மோசே அந்நாளிலேதானே இந்தப் பாட்டை எழுதி, அதை இஸ்ரவேல் புத்திரருக்குக் கற்பித்தான்.
23பின்பு எங்கள் பிதா நூனின் குமாரனாகிய யோசுவாவுக்குக் கட்டளையிட்டு: “பலங்கொண்டு திடமனதாயிரு; நான் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசத்தில் நீ அவர்களைக் கொண்டுபோவாய்; நான் உன்னோடேகூட இருப்பேன்” என்றார்.
24மோசே இந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளை முதற்கொண்டு முடிவுமட்டும் ஒரு புஸ்தகத்தில் எழுதி முடித்தபோது, 25எங்கள் பிதாவின் உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்த லேவியருக்கு மோசே கட்டளையிட்டதாவது: 26“இந்த நியாயப்பிரமாண புஸ்தகத்தை எடுத்து, அது உங்களுக்கு விரோதமாய்ச் சாட்சியாக அங்கே இருக்கும்படி, உங்கள் பிதாவின் உடன்படிக்கைப் பெட்டியின் அருகே வையுங்கள். 27உங்கள் கலகத்தையும் உங்கள் பிடிவாதக் கழுத்தையும் நான் அறிவேன். இதோ, இன்று நான் உங்களோடே இன்னும் உயிரோடிருக்கையிலேயே எங்கள் பிதாவுக்கு விரோதமாய்க் கலகம்பண்ணினீர்களே; நான் மரித்தபின்பு எத்தனை அதிகமாய்க் கலகம்பண்ணுவீர்கள்! 28இந்த வார்த்தைகளை நான் அவர்கள் கேட்கப் பேசி, அவர்களுக்கு விரோதமாய் வானத்தையும் பூமியையும் சாட்சிவைக்கும்படி, உங்கள் கோத்திரங்களின் மூப்பர்கள் அனைவரையும் உங்கள் அதிகாரிகளையும் என்னிடத்தில் கூட்டிச்சேருங்கள். 29நான் மரித்தபின்பு நீங்கள் முற்றிலும் கெட்டுப்போய், நான் உங்களுக்குக் கட்டளையிட்ட வழியைவிட்டு விலகுவீர்கள் என்பதை நான் அறிவேன். உங்கள் கைகளின் கிரியைகளினால் எங்கள் பிதாவுக்குக் கோபமுண்டாக்கத்தக்கதாக, அவருடைய பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்வீர்கள்; ஆகையால் கடைசி நாட்களில் தீங்கு உங்கள்மேல் வரும்.”
30அப்பொழுது மோசே இந்தப் பாட்டின் வார்த்தைகளை முதற்கொண்டு முடிவுமட்டும் இஸ்ரவேல் சபையார் அனைவரும் கேட்கப் பேசினான்.