தாவீதின் கடைசிப் பாடல்
23 1இப்பொழுது தாவீதின் கடைசி வார்த்தைகள் இவைகளே. ஈசாயின் குமாரனாகிய தாவீதின் வாக்கு, உன்னதத்தில் உயர்த்தப்பட்ட மனிதனும், யாக்கோபின் தேவனாகிய எங்கள் பிதாவால் அபிஷேகம் பண்ணப்பட்டவனும், இஸ்ரவேலின் அன்பான பாடகனுமாகிய அவனுடைய வாக்கு: a a v1 வாக்கு என்பது தேவ ஆவியால் ஏவப்பட்ட தீர்க்கதரிசன வார்த்தை; இங்கே தாவீது தேவனுடைய ஆவியால் ஏவப்பட்டவனாகப் பேசுகிறான். 2எங்கள் பிதாவின் ஆவி என்னைக்கொண்டு பேசினார்; அவருடைய வார்த்தை என் நாவின்மேல் இருந்தது.
3இஸ்ரவேலின் தேவனாகிய எங்கள் பிதா பேசினார்; இஸ்ரவேலின் கன்மலை என்னிடத்தில் சொன்னது: “ஒருவன் நீதியாய் மக்களை ஆளும்போது, தேவபயத்தோடே ஆளும்போது,
4அவன் காலை வெளிச்சத்தைப்போல் இருக்கிறான் மேகமில்லாத விடியற்காலத்தில் சூரியன் உதிக்கும்போது, மழைக்குப் பின்பு உண்டாகும் பிரகாசத்தைப்போல், அது பூமியிலிருந்து புல்லை முளைக்கச்செய்கிறது.
5என் வீடு எங்கள் பிதாவினிடத்தில் இப்படியிருக்கவில்லையோ? அவர் என்னோடே நித்திய உடன்படிக்கையை, எல்லாவற்றிலும் ஒழுங்குபடுத்தப்பட்டதும் உறுதியானதுமாய், பண்ணியிருக்கிறாரே. அவர் என் இரட்சிப்பு அனைத்தையும் என் விருப்பம் அனைத்தையும் நிறைவேற்றமாட்டாரோ? 6ஆனால் நீசர் அனைவரும் எறியப்பட்ட முள்ளுகளைப்போல் இருக்கிறார்கள், ஏனெனில் அவைகளை வெறுங்கையால் எடுக்கமுடியாது. 7அவைகளைத் தொடவேண்டியவன் இரும்பையும் ஈட்டியின் தாங்குகோலையும் தரித்துக்கொள்கிறான், அவைகள் அந்த இடத்திலேயே அக்கினியால் சுட்டெரிக்கப்படும்.”
தாவீதின் பராக்கிரமசாலிகள்
8தாவீதின் பராக்கிரமசாலிகளின் பெயர்கள் இவைகளே: தக்மோனியனாகிய யோசேப்பாஷெபேத் மூன்றுபேரில் தலைவனாயிருந்தான்; அவன் தன் ஈட்டியை 800 பேருக்கு விரோதமாய் ஓங்கி அவர்களை ஒரேயடியாய்க் கொன்றுபோட்டான். 9அவனுக்கு அடுத்தவன் அகோகியனாகிய தோதோவின் குமாரன் எலெயாசார்; இவன் யுத்தத்திற்குக் கூடிவந்த பெலிஸ்தரை எதிர்த்து நின்றபோது தாவீதோடிருந்த மூன்று பராக்கிரமசாலிகளில் ஒருவன்; அப்பொழுது இஸ்ரவேலின் மனுஷர் பின்வாங்கிப்போனார்கள். 10இவன் எழும்பி, தன் கை இளைத்து பட்டயத்தோடே ஒட்டிக்கொள்ளும்வரை பெலிஸ்தரை வெட்டினான். அந்நாளில் எங்கள் பிதா பெரிய ஜெயத்தை உண்டாக்கினார்; ஜனங்கள் கொள்ளையிடுவதற்குமாத்திரம் அவனுக்குப் பின்னாகத் திரும்பிவந்தார்கள். 11அவனுக்கு அடுத்தவன் ஆராரியனாகிய ஆகேயின் குமாரன் சம்மா. பெலிஸ்தர் பயறு நிறைந்த ஒரு வயல்நிலம் இருந்த லேகியிலே கூடிவந்தார்கள்; ஜனங்கள் அவர்களுக்கு முன்பாக ஓடிப்போனார்கள். 12ஆனால் சம்மா அந்த வயலின் நடுவிலே நின்று, அதைக் காப்பாற்றி, பெலிஸ்தரை வெட்டிப்போட்டான். எங்கள் பிதா பெரிய ஜெயத்தை உண்டாக்கினார்.
13அறுவடைக்காலத்தில் முப்பது தலைவரில் மூன்றுபேர் அதுல்லாம் என்னும் கெபியிலிருந்த தாவீதினிடத்தில் இறங்கிப்போனார்கள்; பெலிஸ்தரின் ஒரு படை ரெப்பாயீம் பள்ளத்தாக்கில் பாளயமிறங்கியிருந்தது. 14அப்பொழுது தாவீது அரணான ஸ்தலத்தில் இருந்தான்; பெலிஸ்தரின் தாணையம் பெத்லகேமில் இருந்தது. 15தாவீது தண்ணீருக்கு ஆசைப்பட்டு, “பெத்லகேமின் ஒலிமுகவாசலண்டையிலிருக்கிற கிணற்றின் தண்ணீரை யாராவது எனக்குக் குடிக்கக் கொடுத்தால் நலமாயிருக்குமே!” என்றான்.
16அப்பொழுது அந்த மூன்று பராக்கிரமசாலிகளும் பெலிஸ்தரின் பாளயத்தை ஊடுருவிக்கடந்து, பெத்லகேமின் ஒலிமுகவாசலண்டையிலிருந்த கிணற்றிலிருந்து தண்ணீர் மொண்டு, தாவீதினிடத்தில் கொண்டுவந்தார்கள். ஆனால் அவன் அதைக் குடிக்க மனதில்லாமல், அதை எங்கள் பிதாவுக்கென்று ஊற்றிப்போட்டான். 17அவன், “என் பிதாவே, நான் இப்படிச் செய்வது எனக்குத் தூரமாயிருப்பதாக! தங்கள் பிராணனை ஆபத்திற்குட்படுத்திப் போனவர்களின் இரத்தம் அல்லவா இது?” என்று சொல்லி, அதைக் குடிக்க மனதில்லாதிருந்தான். இந்தக் காரியங்களை அந்த மூன்று பராக்கிரமசாலிகளும் செய்தார்கள்.
18செருயாவின் குமாரனும் யோவாபின் சகோதரனுமாகிய அபிசாய் முப்பதுபேரில் தலைவனாயிருந்தான். அவன் தன் ஈட்டியை 300 பேருக்கு விரோதமாய் ஓங்கி அவர்களைக் கொன்றுபோட்டு, அந்த மூன்றுபேரில் புகழ்பெற்றான். 19அவன் அந்த முப்பதுபேரில் மிகவும் கனமுள்ளவனல்லவா? அவன் அவர்களுக்குத் தலைவனானான்; ஆனாலும் அந்த மூன்றுபேரில் ஒருவனாக அவன் இல்லை.
20யோய்தாவின் குமாரன் பெனாயா கப்செயேல் ஊரானாகிய பராக்கிரமசாலி; இவன் பெரிய செய்கைகளைச் செய்தவன். இவன் மோவாபின் இரண்டு பராக்கிரமசாலிகளை வெட்டிப்போட்டான். இவன் உறைந்த மழைபெய்த நாளிலே ஒரு குழிக்குள் இறங்கி, அங்கே ஒரு சிங்கத்தைக் கொன்றுபோட்டான். 21அவன் அழகான ஒரு எகிப்தியனையும் வெட்டிப்போட்டான். அந்த எகிப்தியன் கையில் ஒரு ஈட்டியைப் பிடித்திருந்தான்; ஆனாலும் பெனாயா ஒரு தடியைமாத்திரம் பிடித்துக்கொண்டு அவனிடத்திற்குப் போய், எகிப்தியனுடைய கையிலிருந்த ஈட்டியைப் பறித்துக்கொண்டு, அவனுடைய சொந்த ஈட்டியினாலேயே அவனைக் கொன்றுபோட்டான். 22இவைகளை யோய்தாவின் குமாரன் பெனாயா செய்து, அந்த மூன்று பராக்கிரமசாலிகளுக்குள்ளே புகழ்பெற்றான். 23அவன் முப்பதுபேரைப்பார்க்கிலும் கனமுள்ளவனாயிருந்தான்; ஆனாலும் அந்த மூன்றுபேரில் ஒருவனாக இருக்கவில்லை. தாவீது அவனைத் தன் மெய்க்காவலர்மேல் அதிகாரியாக வைத்தான்.
24அந்த முப்பதுபேரில் இருந்தவர்கள்: யோவாபின் சகோதரன் ஆசகேல்; பெத்லகேம் ஊரானாகிய தோதோவின் குமாரன் எல்க்கானான்; 25ஆரோதியனாகிய சம்மா; ஆரோதியனாகிய எலிக்கா; 26பல்தியனாகிய ஏலெஸ்; தெக்கோவா ஊரானாகிய இக்கேசின் குமாரன் ஈரா; 27ஆனதோத்தியனாகிய அபியேசர்; ஊஷாத்தியனாகிய மெபுன்னாயி; 28அகோகியனாகிய சல்மோன்; நெத்தோப்பாத்தியனாகிய மகராயி; 29நெத்தோப்பாத்தியனாகிய பானாவின் குமாரன் ஏலேப்; பென்யமீன் புத்திரரின் கிபியா ஊரானாகிய ரிபாயின் குமாரன் இத்தாயி; 30பிரத்தோனியனாகிய பெனாயா; காயாஸ் என்னும் ஆற்றுப்பள்ளத்தாக்குகளிலிருந்து வந்த இத்தாயி; 31அர்பாத்தியனாகிய அபியல்போன்; பர்கூமியனாகிய அஸ்மாவேத்; 32சால்போனியனாகிய எலியாபா; யாசேனின் குமாரர்; யோனத்தான்; 33ஆராரியனாகிய சம்மா; ஆராரியனாகிய சாராரின் குமாரன் அகியாம்; 34மாகாத்தியனாகிய அகஸ்பாயின் குமாரன் எலிப்பேலேத்; கீலோனியனாகிய அகித்தோப்பேலின் குமாரன் எலீயாம்; 35கர்மேலியனாகிய எஸ்ராயி; அர்பியனாகிய பாராயி; 36சோபா ஊரானாகிய நாத்தானின் குமாரன் ஈகால்; காத்தியனாகிய பானி; 37அம்மோனியனாகிய சேலேக்; செருயாவின் குமாரன் யோவாபின் ஆயுததாரியாகிய பேரோத்தியனாகிய நகராயி; 38இத்திரியனாகிய ஈரா; இத்திரியனாகிய காரேப்; 39ஏத்தியனாகிய உரியா; ஆக எல்லாரும் முப்பத்தேழுபேர்.