பிதாவைத் தேடிய ஒரு ராஜா
26 1அப்பொழுது யூதாவின் ஜனங்கள் எல்லாரும், பதினாறு வயதுள்ள உசியாவை, அவன் தகப்பனாகிய அமத்சியாவின் இடத்தில் ராஜாவாக்கினார்கள். 2ராஜா தன் முன்னோர்களோடே இளைப்பாறினபின், இவன் ஏலோத்தைத் திரும்பக் கட்டி அதை யூதாவுக்குச் சேர்த்துக்கொண்டான். 3உசியா பதினாறு வயதில் ராஜாவாகி, எருசலேமில் ஐம்பத்திரண்டு வருஷம் அரசாண்டான்; அவன் தாயின் பேர் எருசலேம் ஊராளாகிய எகொலியாள். 4அவன் தன் தகப்பனாகிய அமத்சியா செய்ததுபோலவே, எங்கள் பிதாவின் பார்வைக்கு நியாயமானதைச் செய்தான். 5எங்கள் பிதாவுக்குப் பயந்திருக்கும்படி அவனுக்குப் போதித்த சகரியாவின் நாட்களில், அவன் எங்கள் பிதாவைத் தேடுவதில் தன்னை ஒப்புக்கொடுத்தான்; அவன் எங்கள் பிதாவைத் தேடின நாள்வரையில், தேவன் அவனைச் செழிக்கப்பண்ணினார்.
6அவன் புறப்பட்டுப்போய், பெலிஸ்தரோடே யுத்தம்பண்ணி, காத்தின் மதிலையும், யப்னேயின் மதிலையும், அஸ்தோத்தின் மதிலையும் இடித்துப்போட்டு, அஸ்தோத்துக்கு அருகிலும் பெலிஸ்தருக்குள்ளும் பட்டணங்களைக் கட்டினான். 7எங்கள் பிதா அவனைப் பெலிஸ்தருக்கும், கூர்பாகாலில் குடியிருக்கிற அரபியருக்கும், மெயூனியருக்கும் விரோதமாய் உதவிசெய்தார். 8அம்மோனியர் உசியாவுக்குக் காணிக்கை செலுத்தினார்கள்; அவன் மகா பலவானாய்ப் பெருகினதினால், அவனுடைய புகழ் எகிப்தின் எல்லைமட்டும் பரம்பிற்று. 9உசியா எருசலேமிலே மூலைவாசலிலும், பள்ளத்தாக்கின் வாசலிலும், கோணத்திலும் கொத்தளங்களைக் கட்டி, அவைகளைப் பலப்படுத்தினான். a a v9 கோணம் என்பது எருசலேமின் நகரமதிலில் வெளித்தள்ளிய ஒரு குறிப்பிட்ட பகுதி; பெயர்சொல்லப்பட்ட வாசல்களிலிருந்து வேறுபட்டது. 10அவன் வனாந்தரத்திலே கொத்தளங்களைக் கட்டி, அநேக கிணறுகளை வெட்டினான்; ஏனெனில் பள்ளத்தாக்கிலும் சமபூமியிலும் அவனுக்கு ஏராளமான மந்தைகள் இருந்தன. நிலத்தை நேசித்தபடியால், மலைகளிலும் செழிப்பான வயல்களிலும் பயிரிடுகிறவர்களையும் திராட்சத்தோட்டக்காரர்களையும் வைத்திருந்தான். 11உசியாவுக்குப் படைப்பிரிவுகளாய் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க, பழகின சேவகர்கொண்ட ஒரு சேனை இருந்தது; அது கணக்கன் ஏயெலும் அதிகாரியாகிய மாசெயாவும் எண்ணிக்கணக்குப்பண்ணினபடி, ராஜாவின் படைத்தலைவரில் ஒருவனாகிய அனனியாவின் கீழே இருந்தது. 12பராக்கிரமசாலிகளுக்குத் தலைவர்களான வம்சத்தலைவர்களின் மொத்த எண்ணிக்கை இரண்டாயிரத்து அறுநூறு. 13அவர்களுடைய கட்டளையின்கீழே, எதிரிகளுக்கு விரோதமாய் ராஜாவுக்கு உதவிசெய்ய, மகா பலத்தோடே யுத்தம்பண்ணப் பழகின மூன்றுலட்சத்து ஏழாயிரத்து ஐந்நூறுபேர்கொண்ட சேனை இருந்தது. 14உசியா அந்தச் சேனை முழுமைக்கும் கேடகங்களையும், ஈட்டிகளையும், தலைச்சீராக்களையும், கவசங்களையும், வில்களையும், கவண்கற்களையும் ஆயத்தப்படுத்திக்கொடுத்தான். 15அம்புகளை எய்யவும், பெரிய கற்களை எறியவும், நிபுணர்களால் கண்டுபிடிக்கப்பட்ட யுக்திகளை அவன் எருசலேமில் செய்து, கொத்தளங்கள்மேலும் மூலைகள்மேலும் வைத்தான். அவன் பலவானாகுமட்டும் அதிசயமாய் உதவிபெற்றபடியால், அவனுடைய புகழ் தூரமட்டும் பரம்பிற்று.
உசியாவின் அகந்தையும் அவன் வீழ்ச்சியும்
16உசியா பலவானானபோது, அவன் இருதயம் அகந்தைகொண்டு, அவன் வீழ்ச்சிக்கு ஏதுவாயிற்று; அவன் தூபபீடத்தின்மேல் தூபங்காட்ட எங்கள் பிதாவின் ஆலயத்தில் பிரவேசித்து, எங்கள் பிதாவுக்கு விரோதமாய் உண்மைதவறினான். 17ஆசாரியனாகிய அசரியா, எங்கள் பிதாவினுடைய தைரியமுள்ள எண்பது ஆசாரியர்களோடே அவன் பின்னாக உள்ளே போய், 18ராஜாவாகிய உசியாவை எதிர்த்துநின்று, அவனை நோக்கி: “உசியாவே, எங்கள் பிதாவுக்குத் தூபங்காட்டுகிறது உமக்கு அடுத்ததல்ல; தூபங்காட்டப் பிரதிஷ்டையாக்கப்பட்ட ஆரோனின் சந்ததியாராகிய ஆசாரியர்களுக்கே அடுத்தது; பரிசுத்த ஸ்தலத்தைவிட்டு வெளியே போம்; நீர் உண்மைதவறினீர்; இது எங்கள் பிதாவினிடத்திலிருந்து உமக்கு மகிமையைக் கொடாது” என்றார்கள்.
19அப்பொழுது உசியா உக்கிரங்கொண்டு, தூபங்காட்டத் தன் கையிலே தூபகலசத்தைப் பிடித்திருந்தான்; அவன் ஆசாரியர்மேல் கடுங்கோபங்கொண்டிருக்கையில், எங்கள் பிதாவின் ஆலயத்திலே தூபபீடத்துக்கு அருகே ஆசாரியர் கண்களுக்கு முன்பாகவே, அவன் நெற்றியிலே தீட்டுப்படுத்தும் ஒரு தோல்வியாதி எழும்பிற்று. 20பிரதான ஆசாரியனாகிய அசரியாவும் மற்ற ஆசாரியர் எல்லாரும் அவனை நோக்கிப்பார்த்தபோது, இதோ, அவன் நெற்றியிலே தோல்வியாதி இருக்கக்கண்டு, அவனை அங்கேயிருந்து அவசரமாய் வெளியே தள்ளினார்கள்; எங்கள் பிதா அவனை அடித்தபடியால், அவனும் விரைந்து வெளியே போனான். 21ராஜாவாகிய உசியா தன் மரணநாள்வரையில் தோல்வியாதியுள்ளவனாயிருந்து, எங்கள் பிதாவின் ஆலயத்திலிருந்து தள்ளப்பட்டவனாய், வியாதியுள்ளவனாய் ஒரு தனித்த வீட்டில் குடியிருந்தான்; அவன் குமாரனாகிய யோதாம் அரமனையை நடத்தி, தேசத்தின் ஜனங்களை ஆண்டுவந்தான்.
22உசியாவின் ஆதியோடந்தமான மற்ற நடபடிகளை ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா தீர்க்கதரிசி எழுதிவைத்தான். 23உசியா தன் முன்னோர்களோடே இளைப்பாறினான்; “இவன் தோல்வியாதியுள்ளவன்” என்று சொல்லி, ராஜாக்களுக்குரிய அடக்கஸ்தல வயலிலே அவர்களுக்கு அருகே அவனை அடக்கம்பண்ணினார்கள். அவன் குமாரனாகிய யோதாம் அவன் இடத்தில் அரசாண்டான்.