எங்கள் பிதா ரெகொபெயாமின் யுத்தத்தைத் தடுக்கிறார்
11 1ரெகொபெயாம் எருசலேமுக்கு வந்து, இஸ்ரவேலுக்கு விரோதமாக யுத்தம்பண்ணி, ராஜ்யத்தைத் திரும்ப ரெகொபெயாமிடம் கொண்டுவரும்படி, யூதா மற்றும் பென்யமீன் வம்சத்தாரில் தெரிந்தெடுக்கப்பட்ட 1,80,000 போர்வீரர்களைக் கூட்டிச்சேர்த்தான். 2ஆனால் தேவனுடைய மனுஷனாகிய செமாயாவுக்கு எங்கள் பிதாவின் வார்த்தை உண்டாகி, அவர் சொன்னது:
3"சாலொமோனின் குமாரனும் யூதாவின் ராஜாவுமாகிய ரெகொபெயாமோடும், யூதாவிலும் பென்யமீனிலுமுள்ள இஸ்ரவேலர் அனைவரோடும் சொல்: 4எங்கள் பிதா சொல்லுகிறது என்னவென்றால்: நீங்கள் போகாமலும் உங்கள் சகோதரருக்கு விரோதமாக யுத்தம்பண்ணாமலும் இருங்கள். அவனவன் தன் தன் வீட்டிற்குத் திரும்பிப்போங்கள்; இந்தக் காரியம் என்னாலே உண்டாயிற்று." அப்பொழுது அவர்கள் எங்கள் பிதாவின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து, யெரொபெயாமுக்கு விரோதமாய்ப் போகாமல் திரும்பிப்போனார்கள்.
ரெகொபெயாம் யூதாவை பலப்படுத்துகிறான்
5ரெகொபெயாம் எருசலேமிலே குடியிருந்து, யூதாவிலே பாதுகாப்புக்கான பட்டணங்களைக் கட்டினான். 6அவன் பெத்லகேமையும், ஏத்தாமையும், தெக்கோவாவையும், 7பெத்சூரையும், சோக்கோவையும், அதுல்லாமையும், 8காத்தையும், மரேசாவையும், சீப்பையும், 9அதொராயீமையும், லாகீசையும், அசெக்காவையும், 10சோராவையும், ஆயலோனையும், எப்ரோனையும் கட்டினான்; இவை யூதாவிலும் பென்யமீனிலுமுள்ள அரணான பட்டணங்கள். 11அவன் அந்த அரண்களைப் பலப்படுத்தி, அவைகளில் தலைவர்களையும், உணவு, எண்ணெய், திராட்சரசம் ஆகியவற்றின் சேமிப்பையும் வைத்தான். 12ஒவ்வொரு பட்டணத்திலும் கேடகங்களையும் ஈட்டிகளையும் வைத்து, அவைகளை மிகவும் பலப்படுத்தினான். இப்படியாக யூதாவும் பென்யமீனும் அவனுடையவைகளாய் இருந்தன.
13இஸ்ரவேல் எங்கும் இருந்த ஆசாரியர்களும் லேவியர்களும் தங்கள் எல்லா எல்லைகளிலுமிருந்து அவனிடம் வந்து சேர்ந்தார்கள். 14ஏனெனில் யெரொபெயாமும் அவன் குமாரரும் எங்கள் பிதாவின் ஆசாரிய ஊழியத்திலிருந்து அவர்களை நீக்கிப்போட்டதால், லேவியர்கள் தங்கள் மேய்ச்சல் நிலங்களையும் சொத்துகளையும் விட்டுவிட்டு, யூதாவுக்கும் எருசலேமுக்கும் போனார்கள். 15அவன் மேடைகளுக்கும், தான் உண்டாக்கின வெள்ளாட்டு உருவங்களுக்கும், கன்றுக்குட்டி உருவங்களுக்கும் தனக்குச் சொந்த ஆசாரியர்களை நியமித்தான். 16இஸ்ரவேலின் எல்லாக் கோத்திரங்களிலும், இஸ்ரவேலின் தேவனாகிய எங்கள் பிதாவைத் தேட தங்கள் இருதயத்தை நேராக்கினவர்கள், தங்கள் முன்னோர்களின் தேவனாகிய எங்கள் பிதாவுக்குப் பலியிடும்படி லேவியரைப் பின்பற்றி எருசலேமுக்கு வந்தார்கள். 17அவர்கள் யூதாவின் ராஜ்யத்தைப் பலப்படுத்தி, சாலொமோனின் குமாரனாகிய ரெகொபெயாமை மூன்று வருஷம் ஆதரித்தார்கள்; ஏனெனில் அவர்கள் தாவீதும் சாலொமோனும் நடந்த வழியிலே மூன்று வருஷம் நடந்தார்கள்.
ரெகொபெயாமின் குடும்பம்
18ரெகொபெயாம் தாவீதின் குமாரனாகிய யெரிமோத்தின் மகளாகிய மகலாத்தையும், ஈசாயின் குமாரனாகிய எலியாபின் மகளாகிய அபியாயேலின் மகளையும் விவாகம்பண்ணினான். 19அவள் அவனுக்கு எயூஷ், செமரியா, சாகாம் என்னும் குமாரரைப் பெற்றாள். 20அவளுக்குப் பின்பு, அப்சலோமின் மகளாகிய மாக்காளை விவாகம்பண்ணினான்; அவள் அவனுக்கு அபியாவையும், அத்தாயையும், சீசாவையும், செலோமித்தையும் பெற்றாள். 21ரெகொபெயாமுக்கு பதினெட்டு மனைவிகளும் அறுபது மறுமனையாட்டிகளும் இருந்தார்கள்; அவனுக்கு இருபத்தெட்டு குமாரரும் அறுபது குமாரத்திகளும் பிறந்தார்கள்; அவன் தன் மற்ற எல்லா மனைவிகளையும் மறுமனையாட்டிகளையும்பார்க்கிலும் அப்சலோமின் மகளாகிய மாக்காளை அதிகமாய் நேசித்தான். 22ரெகொபெயாம் மாக்காளின் குமாரனாகிய அபியாவை ராஜாவாக்கும்படி நினைத்து, அவனைத் தன் சகோதரருக்குள்ளே தலைமைத் தலைவனாக நியமித்தான். 23அவன் புத்தியுடன் நடந்து, தன் குமாரரில் சிலரை யூதா மற்றும் பென்யமீனின் எல்லா மாவட்டங்களிலும், ஒவ்வொரு அரணான பட்டணத்திலும் பரவலாய் அனுப்பி, அவர்களுக்கு ஏராளமான உணவுப்பொருட்களைக் கொடுத்து, அவர்களுக்கு அநேக மனைவிகளையும் தேடினான்.