தாவீது எங்கள் பிதாவால் அபிஷேகம் பண்ணப்பட்டவனை மீண்டும் தப்பவிடுகிறான்
26 1சீப் ஊரார் கிபியாவிலிருந்த சவுலிடம் வந்து, “எஷிமோனுக்கு எதிரே இருக்கிற ஆகிலா மலையில் தாவீது ஒளிந்திருக்கவில்லையா?” என்றார்கள். 2அப்பொழுது சவுல் எழுந்து, அங்கே தாவீதைத் தேடும்படி, இஸ்ரவேலிலிருந்து தெரிந்துகொள்ளப்பட்ட மூவாயிரம்பேரோடு சீப் வனாந்தரத்திற்குப் போனான். 3சவுல் வழியோரமாய் எஷிமோனுக்கு எதிரே இருக்கிற ஆகிலா மலையில் பாளயமிறங்கினான்; தாவீதோ வனாந்தரத்தில் தங்கியிருந்தான். சவுல் தன்னைத் தொடர்ந்து வனாந்தரத்திற்கு வந்ததைத் தாவீது கண்டு, 4வேவுகாரரை அனுப்பி, சவுல் மெய்யாகவே வந்துவிட்டதை அறிந்துகொண்டான். 5பின்பு தாவீது எழுந்து, சவுல் பாளயமிறங்கியிருந்த இடத்திற்குப் போய், சவுலும் அவனுடைய படைத்தலைவனாகிய நேரின் குமாரன் அப்னேரும் படுத்திருந்த இடத்தைப் பார்த்தான்; சவுல் பாளயத்தின் நடுவே படுத்திருந்தான், படைவீரர் அவனைச் சூழ்ந்திருந்தார்கள். 6தாவீது ஏத்தியனாகிய அகிமெலேக்கையும், யோவாபின் சகோதரனும் செருயாவின் குமாரனுமாகிய அபிசாயையும் நோக்கி, “சவுலின் பாளயத்திற்கு என்னோடேகூட யார் இறங்கிவருவார்?” என்று கேட்டான். அதற்கு அபிசாய், “நான் உம்மோடேகூட வருகிறேன்” என்றான்.
7அப்படியே தாவீதும் அபிசாயும் இரவில் படைவீரரிடம் வந்தார்கள்; இதோ, சவுல் பாளயத்தில் நித்திரையாய்ப் படுத்திருந்தான், அவன் தலைமாட்டில் அவனுடைய ஈட்டி நிலத்தில் குத்தி நிற்க, அப்னேரும் படைவீரரும் அவனைச் சூழ்ந்து படுத்திருந்தார்கள். 8அப்பொழுது அபிசாய் தாவீதை நோக்கி, “இன்று எங்கள் பிதா உம்முடைய சத்துருவை உம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; இப்போதும் நான் அவனை ஒரே ஈட்டியினால் தரையோடே சேர்த்துக் குத்திப்போடுகிறேன்; இரண்டாம்முறை குத்தவேண்டியதில்லை” என்றான்.
9தாவீதோ அபிசாயை நோக்கி, “அவனை அழிக்கவேண்டாம்; எங்கள் பிதாவால் அபிஷேகம் பண்ணப்பட்டவன்மேல் தன் கையை நீட்டி, குற்றமில்லாதிருக்கத்தக்கவன் யார்?” என்றான். 10பின்னும் தாவீது சொன்னது: “எங்கள் பிதாவின் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன், எங்கள் பிதாவே அவனை அடிப்பார்; அல்லது அவனுடைய நாள் வந்து அவன் மரிப்பான்; அல்லது அவன் யுத்தத்தில் இறங்கி அழிந்துபோவான். 11நான் எங்கள் பிதாவால் அபிஷேகம் பண்ணப்பட்டவன்மேல் என் கையை நீட்டுவது எங்கள் பிதாவுக்கு முன்பாக எனக்குத் தூரமாயிருப்பதாக; இப்போதும் அவன் தலைமாட்டில் இருக்கிற ஈட்டியையும் தண்ணீர்ச் செம்பையும் எடுத்துக்கொண்டு போவோம்” என்றான்.
12அப்படியே தாவீது சவுலின் தலைமாட்டில் இருந்த ஈட்டியையும் தண்ணீர்ச் செம்பையும் எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள்; ஒருவரும் அதைக் காணவுமில்லை, அறியவுமில்லை, விழித்துக்கொள்ளவுமில்லை; ஏனெனில் எங்கள் பிதாவினால் உண்டான ஆழ்ந்த தூக்கம் அவர்கள் எல்லார்மேலும் இறங்கியிருந்தது.
13பின்பு தாவீது அந்தப்பக்கம் கடந்துபோய், தூரத்தில் ஒரு மலையின் உச்சியில் நின்றான்; அவர்களுக்கு நடுவே அதிக இடைவெளி இருந்தது. 14தாவீது படைவீரரையும் நேரின் குமாரனாகிய அப்னேரையும் நோக்கி, “அப்னேரே, நீ பதில் சொல்லமாட்டாயா?” என்று கூப்பிட்டான். அதற்கு அப்னேர், “ராஜாவைக் கூப்பிடுகிற நீ யார்?” என்றான்.
15அப்பொழுது தாவீது அப்னேரை நோக்கி, “நீ ஒரு புருஷன் அல்லவா? இஸ்ரவேலில் உனக்கு நிகரானவன் யார்? பின்னை ஏன் உன் ஆண்டவனாகிய ராஜாவைக் காக்கவில்லை? உன் ஆண்டவனாகிய ராஜாவை அழிக்க ஒருவன் வந்தானே. 16நீ செய்த இந்தக் காரியம் நல்லதல்ல; எங்கள் பிதாவின் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன், எங்கள் பிதாவால் அபிஷேகம் பண்ணப்பட்ட உங்கள் ஆண்டவனை நீங்கள் காக்காமற்போனதினால், நீங்கள் மரணத்திற்குப் பாத்திரவான்கள்; இப்போது ராஜாவின் தலைமாட்டில் இருந்த ஈட்டியும் தண்ணீர்ச் செம்பும் எங்கே என்று பாரும்” என்றான்.
17சவுல் தாவீதின் சத்தத்தை அறிந்து, “என் குமாரனாகிய தாவீதே, இது உன் சத்தமல்லவா?” என்றான். அதற்குத் தாவீது, “என் ஆண்டவனாகிய ராஜாவே, இது என் சத்தம்தான்” என்று சொல்லி,
18“என் ஆண்டவன் தம்முடைய அடியானை இப்படித் தொடர்ந்துவருகிறது ஏன்? நான் என்ன செய்தேன்? என் கையில் இருக்கிற பொல்லாப்பு என்ன? 19இப்போதும் ராஜாவாகிய என் ஆண்டவன் தம்முடைய அடியானின் வார்த்தைகளைக் கேட்பாராக: எங்கள் பிதா உம்மை எனக்கு விரோதமாக ஏவியிருந்தால், அவர் காணிக்கையை அங்கிகரிப்பாராக; மனுஷராயிருந்து இதைச் செய்திருந்தால், அவர்கள் அவருக்கு முன்பாகச் சபிக்கப்பட்டவர்களாயிருப்பார்களாக; ஏனெனில், ‘நீ போய் அந்நிய தேவர்களைச் சேவி’ என்று சொல்லி, அவருடைய சுதந்தரத்தில் எனக்கிருந்த பங்கை விட்டு இன்று அவர்கள் என்னைத் துரத்திவிட்டார்கள். 20இப்போதும் எங்கள் பிதாவின் சமுகத்திற்குத் தூரமாய் என் இரத்தம் தரையிலே விழவொட்டாதேயுங்கள்; மலைகளில் ஒரு கவுதாரியை வேட்டையாடுவதுபோல, ஒரே தெள்ளுப்பூச்சியைத் தேடி இஸ்ரவேலின் ராஜா புறப்பட்டுவந்தாரே” என்றான்.
21அப்பொழுது சவுல்: “நான் பாவம் செய்தேன்; என் குமாரனாகிய தாவீதே, திரும்பிவா; இன்று என் ஜீவன் உன் பார்வையில் அருமையாயிருந்தபடியால், இனி நான் உனக்குப் பொல்லாப்புச் செய்யமாட்டேன்; நான் புத்தியீனமாய் நடந்து, மகா பெரிய தப்பிதம் செய்தேன்” என்றான்.
22அதற்குத் தாவீது: “இதோ, ராஜாவின் ஈட்டி; வாலிபரில் ஒருவன் இங்கே வந்து அதை எடுத்துக்கொள்ளட்டும். 23எங்கள் பிதா அவனவனுடைய நீதிக்கும் உண்மைக்கும் தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார்; இன்று எங்கள் பிதா உம்மை என் கையில் ஒப்புக்கொடுத்தார், ஆனாலும் எங்கள் பிதாவால் அபிஷேகம் பண்ணப்பட்டவன்மேல் என் கையை நீட்ட எனக்கு மனதில்லாதிருந்தது. 24இதோ, இன்று உம்முடைய ஜீவனை நான் எப்படி அருமையாக எண்ணினேனோ, அப்படியே எங்கள் பிதா என் ஜீவனையும் அருமையாக எண்ணி, சகல இக்கட்டிலுமிருந்து என்னைத் தப்புவிப்பாராக” என்றான்.
25அப்பொழுது சவுல் தாவீதை நோக்கி, “என் குமாரனாகிய தாவீதே, நீ ஆசீர்வதிக்கப்பட்டவன்; நீ பெரிய காரியங்களைச் செய்வாய், நிச்சயமாய் ஜெயங்கொள்வாய்” என்றான். பின்பு தாவீது தன் வழியே போனான்; சவுல் தன் ஸ்தானத்திற்குத் திரும்பிப்போனான்.