பென்யமீனின் வம்சங்கள்: சவுலின் வம்சாவளி
8 1பென்யமீன் பெற்ற பிள்ளைகள்: அவனுடைய முதற்பேறான பேலா, இரண்டாவது அஸ்பேல், மூன்றாவது அகரா, 2நான்காவது நோகா, ஐந்தாவது ராப்பா என்பவர்களே. 3பேலாவுக்கு இருந்த குமாரர்கள்: அத்தார், கேரா, அபியூத், 4அபிசூவா, நாகமான், அகோவா, 5கேரா, செப்புப்பான், ஊராம் என்பவர்களே. 6கேபாவின் குடிகளுக்கு வம்சத்தலைவர்களாயிருந்து மனாகாத்துக்குச் சிறைப்பட்டுப் போன ஏகூதின் குமாரர்கள் இவர்களே: 7நாகமான், அகியா, கேரா என்பவர்களே; அவர்களைச் சிறைப்படுத்திக் கொண்டுபோன கேரா, ஊசாவையும் அகியூதையும் பெற்றான்.
8சகராயீம் தன் மனைவிகளாகிய ஊசீமையும் பாராளையும் அனுப்பிவிட்ட பிறகு, மோவாப் தேசத்தில் பிள்ளைகளைப் பெற்றான். 9அவன் தன் மனைவியாகிய ஓதேசினிடத்தில் யோபாபையும், சீபியாவையும், மேசாவையும், மல்காமையும், 10எயூசையும், சகியாவையும், மிர்மாவையும் பெற்றான்; இவர்களே அவனுடைய குமாரர்கள், குடும்பத் தலைவர்களே. 11அவன் ஊசீமினிடத்தில் அபிதூபையும் எல்பாலையும் பெற்றான். 12எல்பாலின் குமாரர்கள்: ஏபேர், மிஷாம், சேமேத் என்பவர்களே; இவனே ஓனோவையும், லோதையும் அதைச் சூழ்ந்த ஊர்களையும் கட்டினான். 13பெரீகாவும் சேமாவும் ஆயலோன் குடிகளின் குடும்பத் தலைவர்களாயிருந்தார்கள்; இவர்களே காத்தின் குடிகளைத் துரத்திவிட்டார்கள். 14அகியோ, சாசாக், எரிமோத், 15செபதியா, ஆராத், ஏதேர், 16மிகாயேல், இஸ்பா, யோகா என்பவர்கள் பெரீகாவின் குமாரர்களே. 17செபதியா, மெசுல்லாம், இஸ்கி, ஏபேர், 18இஷ்மேராயி, இஸ்லியா, யோபாப் என்பவர்கள் எல்பாலின் குமாரர்களே. 19யாக்கீம், சிக்ரி, சப்தி, 20எலியேனாய், சில்தாய், எலியேல், 21அதாயா, பெராயா, சிம்ராத் என்பவர்கள் சிமியின் குமாரர்களே. 22இஸ்பான், ஏபேர், எலியேல், 23அப்தோன், சிக்ரி, ஆனான், 24அனனியா, ஏலாம், அந்தோதியா, 25இப்தெயா, பெனூயேல் என்பவர்கள் சாசாக்கின் குமாரர்களே. 26சம்சேராயி, செகரியா, அத்தலியா, 27யாரேசியா, எலியா, சிக்ரி என்பவர்கள் எரோகாமின் குமாரர்களே. 28இவர்கள் தங்கள் வம்சாவளியின்படி பதிவுசெய்யப்பட்ட குடும்பத் தலைவர்களும் பிரதானிகளுமாயிருந்தார்கள்; இவர்கள் எருசலேமில் குடியிருந்தார்கள்.
29கிபியோனிலே கிபியோனின் தகப்பன் குடியிருந்தான்; அவனுடைய மனைவியின் பெயர் மாக்காள். 30அவனுடைய முதற்பேறான குமாரன் அப்தோன், பின்பு சூர், கீஸ், பாகால், நாதாப், 31கேதோர், அகியோ, சேகேர் என்பவர்களே. 32மிக்லோத் சிமியாமைப் பெற்றான். இவர்களும் தங்கள் சகோதரரோடேகூட எருசலேமில் அவர்களுக்கு எதிராகக் குடியிருந்தார்கள்.
33நேர் கீசைப் பெற்றான், கீஸ் சவுலைப் பெற்றான், சவுல் யோனத்தானையும், மல்கிசூவாவையும், அபினதாபையும், எஸ்பாலையும் பெற்றான். 34யோனத்தானின் குமாரன் மேரிபால்; மேரிபால் மீகாவைப் பெற்றான். 35மீகாவின் குமாரர்கள்: பித்தோன், மேலேக், தரேயா, ஆகாஸ் என்பவர்களே. 36ஆகாஸ் யோகதாவைப் பெற்றான், யோகதா ஆலெமேத்தையும், அஸ்மாவேத்தையும், சிம்ரியையும் பெற்றான்; சிம்ரி மோசாவைப் பெற்றான். 37மோசா பினியாவைப் பெற்றான்; இவனுடைய குமாரன் ராப்பா, இவனுடைய குமாரன் எலியாசா, இவனுடைய குமாரன் ஆத்சேல். 38ஆத்சேலுக்கு ஆறு குமாரர்கள் இருந்தார்கள்; அவர்களுடைய பெயர்கள்: அஸ்ரீக்காம், போகிரூ, இஸ்மவேல், செகரியா, ஒபதியா, ஆனான் என்பவர்களே; இவர்கள் அனைவரும் ஆத்சேலின் குமாரர்கள். 39அவனுடைய சகோதரனாகிய ஏசேக்கின் குமாரர்கள்: அவனுடைய முதற்பேறான ஊலாம், இரண்டாவது எயூஷ், மூன்றாவது எலிப்பேலேத் என்பவர்களே. 40ஊலாமின் குமாரர்கள் வில்லை நன்றாய் வளைக்கத் தேர்ச்சிபெற்ற பலசாலிகளான போர்வீரராயிருந்தார்கள்; அவர்களுக்கு அநேக குமாரர்களும் பேரப்பிள்ளைகளும் இருந்தார்கள்; மொத்தம் நூற்றைம்பதுபேர். இவர்கள் அனைவரும் பென்யமீனின் குமாரர்களே.