வாசியுங்கள். ஏற்றுக்கொள்ளுங்கள். பரிந்துரையுங்கள்.

♥ மதிப்புரைகள்

1 நாளாகமம் 19

புத்தகம்

தாவீதின் தயவு அவமானமாய்த் திருப்பப்பட்டது

அதிகாரம் 19.

சிலகாலம் சென்றபின், அம்மோனியரின் ராஜாவாகிய நாகாஸ் மரித்தான்; அவனுடைய குமாரன் அவனுடைய இடத்தில் ராஜாவானான். தாவீது, “நாகாசின் குமாரனாகிய ஆனூனுடைய தகப்பன் எனக்குத் தயவு காண்பித்தபடியால், நானும் அவனுக்குத் தயவு காண்பிப்பேன்” என்று சொல்லி, அவனுடைய தகப்பனைக்குறித்து அவனுக்கு ஆறுதல் சொல்ல ஸ்தானாபதிகளை அனுப்பினான். தாவீதின் ஊழியக்காரர் ஆனூனுக்கு ஆறுதல் சொல்ல அம்மோனியரின் தேசத்திற்கு வந்தபோது, அம்மோனியரின் அதிபதிகள் ஆனூனை நோக்கி, “உமக்கு ஆறுதல் சொல்லுகிறவர்களை உம்மிடத்தில் அனுப்பினதினால், தாவீது உம்முடைய தகப்பனை மெய்யாகவே கனம்பண்ணுகிறான் என்று நினைக்கிறீரோ? இந்த தேசத்தைச் சோதித்து அறியவும், கவிழ்த்துப்போடவும், வேவுபார்க்கவும் அல்லவோ அவனுடைய ஊழியக்காரர் உம்மிடத்தில் வந்தார்கள்?” என்றார்கள். அப்பொழுது ஆனூன் தாவீதின் ஊழியக்காரரைப் பிடித்து, அவர்களைச் சிரைத்து, அவர்களுடைய வஸ்திரங்களை இடுப்பு மட்டும் பாதியாய்த் தறித்துப்போட்டு, அவர்களை அனுப்பிவிட்டான். அந்த மனுஷரைக்குறித்து சிலர் தாவீதுக்கு அறிவித்தபோது, அவர்கள் மிகவும் வெட்கப்பட்டிருந்தபடியால், அவர்களைச் சந்திக்க அவன் ஸ்தானாபதிகளை அனுப்பினான். ராஜா, “உங்கள் தாடி வளரும்வரைக்கும் எரிகோவிலே தங்கியிருந்து, பின்பு திரும்பிவாருங்கள்” என்று சொல்லச்சொன்னான்.

அம்மோனியர் தாங்கள் தாவீதுக்கு அருவருப்பானார்கள் என்று கண்டபோது, ஆனூனும் அம்மோனியரும் அரம்நகராயீமிலும், அரம்மாக்காவிலும், சோபாவிலுமிருந்து இரதங்களையும் குதிரைவீரரையும் கூலிக்கு அமர்த்த ஏறக்குறைய முப்பத்தெட்டு டன் வெள்ளியை அனுப்பினார்கள். அவர்கள் முப்பத்தீராயிரம் இரதங்களையும், மாக்காவின் ராஜாவையும் அவனுடைய படைகளையும் கூலிக்கு அமர்த்தினார்கள்; அவர்கள் வந்து மேதேபாவுக்கு எதிரே பாளயமிறங்கினார்கள். அம்மோனியரும் தங்கள் பட்டணங்களிலிருந்து ஏகமாய்க் கூடி யுத்தத்திற்குப் புறப்பட்டார்கள். தாவீது இதைக் கேள்விப்பட்டபோது, யோவாபையும் பராக்கிரமசாலிகளின் சர்வ சேனையையும் அனுப்பினான். அம்மோனியர் புறப்பட்டு, பட்டணத்தின் வாசலண்டையிலே யுத்தத்திற்கு அணிவகுத்து நின்றார்கள்; வந்திருந்த ராஜாக்களோ வெளியிலே தனியாக நின்றார்கள்.

தனக்கு முன்னும் பின்னும் யுத்தம் எழும்பினதை யோவாப் கண்டபோது, இஸ்ரவேலிலே தெரிந்துகொள்ளப்பட்ட சிறந்த சேவகர் யாவரையும் தெரிந்தெடுத்து, சீரியருக்கு எதிராக அணிவகுத்து நிறுத்தினான். மீதியான ஜனத்தைத் தன் சகோதரனாகிய அபிசாயின் கையிலே ஒப்புவித்தான்; அவர்கள் அம்மோனியருக்கு எதிராக அணிவகுத்து நின்றார்கள். யோவாப்: “சீரியர் என்னை மேற்கொண்டால் நீ எனக்கு உதவிசெய்; அம்மோனியர் உன்னை மேற்கொண்டால் நான் உனக்கு உதவிசெய்வேன். திடன்கொள்; நமது ஜனத்திற்காகவும் நமது எங்கள் பிதாவின் பட்டணங்களுக்காகவும் தைரியமாய் யுத்தம்பண்ணுவோமாக; எங்கள் பிதா தமது பார்வைக்கு நலமானதைச் செய்வாராக” என்றான்.

அப்பொழுது யோவாபும் அவனோடிருந்த ஜனமும் சீரியருக்கு விரோதமாய் யுத்தம்பண்ணப் பாய்ந்து சேர்ந்தார்கள்; அவர்கள் அவனுக்கு முன்பாக ஓடிப்போனார்கள். சீரியர் ஓடிப்போனதை அம்மோனியர் கண்டபோது, அவர்களும் தங்கள் சகோதரனாகிய அபிசாய்க்கு முன்பாக ஓடி, பட்டணத்திற்குள் புகுந்தார்கள். பின்பு யோவாப் எருசலேமுக்குத் திரும்பிவந்தான்.

சீரியர் தாங்கள் இஸ்ரவேலால் முறிய அடிக்கப்பட்டதைக் கண்டபோது, ஸ்தானாபதிகளை அனுப்பி, ஐபிராத்து நதிக்கு அப்பாலிருந்த சீரியரை வரவழைத்தார்கள்; அதாதேசரின் சேனாபதியாகிய சோப்பாகு அவர்களுக்குத் தலைவனாயிருந்தான். இது தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் இஸ்ரவேலனைத்தையும் கூட்டிக்கொண்டு, யோர்தானைக் கடந்து, அவர்களிடத்தில் வந்து, அவர்களுக்கு எதிராக யுத்தத்திற்கு அணிவகுத்து நின்றான். தாவீது சீரியருக்கு எதிராக யுத்தத்திற்கு அணிவகுத்தபோது, அவர்கள் அவனோடே யுத்தம்பண்ணினார்கள். சீரியர் இஸ்ரவேலுக்கு முன்பாக ஓடிப்போனார்கள்; தாவீது சீரியரின் இரதவீரரில் ஏழாயிரம்பேரையும், காலாட்படையில் நாற்பதினாயிரம்பேரையும் கொன்று, அவர்களுடைய சேனாபதியாகிய சோப்பாகையும் கொன்றுபோட்டான். அதாதேசரின் ஊழியக்காரர் தாங்கள் இஸ்ரவேலால் முறிய அடிக்கப்பட்டதைக் கண்டபோது, தாவீதோடே சமாதானம்பண்ணி, அவனுக்குக் கீழ்ப்பட்டார்கள்; சீரியர் அப்புறம் அம்மோனியருக்கு உதவிசெய்ய மனதில்லாதிருந்தார்கள்.

A young man reading the Father's Heart Bible print edition in a coffee shop இப்போது அச்சில்

கருத்துகள்

இந்த அதிகாரம் உங்களுக்குள் எழுப்பிய எண்ணம், கேள்வி அல்லது ஒரு வார்த்தை — இங்கே பகிருங்கள். ஒவ்வொரு கருத்தும் உங்கள் பெயரைப் பங்களிப்பாளர் சுவரில் சேர்க்கிறது.

வாசிப்பது, கேட்பது, நகலெடுப்பது, பகிர்வது அனைவருக்கும் திறந்திருக்கிறது — கணக்கு தேவையில்லை. கருத்திடுவது, தனிப்படுத்துவது, உங்கள் இடத்தை நினைவில் வைப்பது இலவசக் கணக்குடன் வருகின்றன, ஒவ்வொரு கருத்தும் உங்கள் பெயரைப் பங்களிப்பாளர் சுவரில் சேர்க்கிறது.

குடும்பத்தில் இணையுங்கள் — இலவசம் →
  • இன்னும் கருத்துகள் இல்லை. உங்கள் குரலைச் சேர்க்கும் முதல் நபராக இருங்கள்.