எங்கள் பிதாவின் கதை தொடங்குகிறது: ஆதாம் முதல் ஆபிரகாம் வரை
1 1ஆதாம், சேத், ஏனோஸ், 2கேனான், மகலாலெயேல், யாரேத், 3ஏனோக்கு, மெத்தூசலா, லாமேக்கு, 4நோவா, சேம், காம், யாப்பேத்.
5யாப்பேத்தின் குமாரர்: கோமர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மேசேக்கு, தீராஸ். 6கோமரின் குமாரர்: அஸ்கினாஸ், தீப்பாத், தொகர்மா. 7யாவானின் குமாரர்: எலீசா, தர்ஷீஸ், கித்தீம், ரோதானீம்.
8காமின் குமாரர்: கூஷ், மிஸ்ராயீம், பூத், கானான். 9கூஷின் குமாரர்: சேபா, ஆவிலா, சப்தா, ராமா, சப்திகா. ராமாவின் குமாரர்: சேபா, தேதான். 10கூஷ் நிம்ரோதைப் பெற்றான்; அவனே பூமியிலே வல்லவனாயிருந்த முதற்பேர்வழி. 11மிஸ்ராயீம் லூதீமையும், ஆனாமீமையும், லேகாபீமையும், நப்தூகீமையும், 12பத்ருசீமையும், (பெலிஸ்தர் தோன்றிய) கஸ்லூகீமையும், காப்தொரீமையும் பெற்றான். 13கானான் தன் மூத்த குமாரனாகிய சீதோனையும், ஏத்தையும், 14எபூசியரையும், எமோரியரையும், கிர்காசியரையும், 15ஏவியரையும், அற்கியரையும், சீனியரையும், 16அர்வாதியரையும், செமாரியரையும், ஆமாத்தியரையும் பெற்றான்.
17சேமின் குமாரர்: ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம்; ஆராமின் குமாரர்: ஊஸ், கூல், கேத்தேர், மேசேக். 18அர்பக்சாத் சாலாவைப் பெற்றான், சாலா ஏபேரைப் பெற்றான். 19ஏபேருக்கு இரண்டு குமாரர் பிறந்தார்கள்: ஒருவனுக்குப் பேலேகு என்று பேர்; ஏனெனில் அவனுடைய நாட்களில் பூமி பகுக்கப்பட்டது; அவன் சகோதரனுக்கு யொக்தான் என்று பேர். 20யொக்தான் அல்மோதாத்தையும், சேலேப்பையும், ஆசர்மாவேத்தையும், யேராவையும், 21அதோராமையும், ஊசாலையும், திக்லாவையும், 22ஏபாலையும், அபிமாயேலையும், சேபாவையும், 23ஓப்பீரையும், ஆவிலாவையும், யோபாபையும் பெற்றான். இவர்கள் எல்லாரும் யொக்தானின் குமாரர். 24சேம், அர்பக்சாத், சாலா, 25ஏபேர், பேலேகு, ரெகூ, 26செரூகு, நாகோர், தேராகு, 27அபிராம், அதாவது ஆபிரகாம்.
ஆபிரகாம் மூலமாய் பிதாவானவரின் வாக்குத்தத்தம்
28ஆபிரகாமின் குமாரர்: ஈசாக்கும் இஸ்மவேலும். 29அவர்களுடைய வம்சவரலாறு: இஸ்மவேலின் மூத்த குமாரன் நெபாயோத்; பின்பு கேதார், அத்பியேல், மிப்சாம், 30மிஷ்மா, தூமா, மாசா, ஆதாத், தேமா, 31யெத்தூர், நாபீஸ், கேத்மா. இவர்களே இஸ்மவேலின் குமாரர்.
32ஆபிரகாமின் மறுமனையாட்டியாகிய கேத்தூராள் சிம்ரானையும், யக்சானையும், மேதானையும், மீதியானையும், இஸ்பாக்கையும், சூவாவையும் பெற்றாள். யக்சானின் குமாரர்: சேபாவும் தேதானும். 33மீதியானின் குமாரர்: ஏப்பா, ஏப்பேர், ஆனோக்கு, அபீதா, எல்தாகா. இவர்கள் எல்லாரும் கேத்தூராளின் குமாரர்.
34ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான். ஈசாக்கின் குமாரர்: ஏசாவும் இஸ்ரவேலும்.
ஏசாவின் குமாரர்
35ஏசாவின் குமாரர்: எலிப்பாஸ், ரெகுவேல், யெயூஷ், யாலாம், கோராகு. 36எலிப்பாசின் குமாரர்: தேமான், ஓமார், செப்பி, கத்தாம், கேனாஸ், திம்னா, அமலேக்கு. 37ரெகுவேலின் குமாரர்: நாகாத், சேரா, சம்மா, மீசா.
38சேயீரின் குமாரர்: லோத்தான், சோபால், சிபியோன், ஆனா, திஷோன், ஏசேர், திஷான். 39லோத்தானின் குமாரர்: ஓரி, ஓமாம்; லோத்தானின் சகோதரி திம்னாள். 40சோபாலின் குமாரர்: அலியான், மனாகாத், ஏபால், செப்பி, ஓனாம். சிபியோனின் குமாரர்: ஆயாவும் ஆனாவும். 41ஆனாவின் குமாரர்: திஷோன். திஷோனின் குமாரர்: ஆம்ரான், எஸ்பான், இத்ரான், கெரான். 42ஏசேரின் குமாரர்: பில்கான், சாவான், யாக்கான். திஷானின் குமாரர்: ஊஸ், ஆரான்.
43இஸ்ரவேல் புத்திரர்மேல் ஒரு ராஜாவும் அரசாளுவதற்கு முன்னே, ஏதோம் தேசத்தில் அரசாண்ட ராஜாக்கள் இவர்களே: பேயோரின் குமாரன் பேலா; அவனுடைய பட்டணத்தின் பேர் தின்காபா. 44பேலா மரித்தபின், போஸ்றா ஊரானாகிய சேராவின் குமாரன் யோபாப் அவன் ஸ்தானத்தில் அரசாண்டான். 45யோபாப் மரித்தபின், தேமானியரின் தேசத்தானாகிய ஊஷாம் அவன் ஸ்தானத்தில் அரசாண்டான். 46ஊஷாம் மரித்தபின், மோவாப் நாட்டிலே மீதியானியரை முறியடித்த பேதாதின் குமாரன் ஆதாத் அவன் ஸ்தானத்தில் அரசாண்டான்; அவனுடைய பட்டணத்தின் பேர் ஆவீத். 47ஆதாத் மரித்தபின், மஸ்ரேக்கா ஊரானாகிய சம்லா அவன் ஸ்தானத்தில் அரசாண்டான். 48சம்லா மரித்தபின், நதியருகான ரெகோபோத் ஊரானாகிய சவுல் அவன் ஸ்தானத்தில் அரசாண்டான். 49சவுல் மரித்தபின், அக்போரின் குமாரன் பாகால்கானான் அவன் ஸ்தானத்தில் அரசாண்டான். 50பாகால்கானான் மரித்தபின், ஆதாத் அவன் ஸ்தானத்தில் அரசாண்டான்; அவனுடைய பட்டணத்தின் பேர் பாகி; அவன் மனைவியின் பேர் மெகேத்தபேல்; அவள் மேசாகாபின் குமாரத்தியாகிய மத்ரேதின் மகள். 51பின்பு ஆதாத் மரித்தான். ஏதோமின் பிரபுக்கள்: திம்னா பிரபு, அலியா பிரபு, யெத்தேத் பிரபு, 52அகோலிபாமா பிரபு, ஏலா பிரபு, பினோன் பிரபு, 53கேனாஸ் பிரபு, தேமான் பிரபு, மிப்சார் பிரபு, 54மக்தியேல் பிரபு, ஈராம் பிரபு. இவர்களே ஏதோமின் பிரபுக்கள்.